டிசம்பர் வரை அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: தமிழக அரசு!!

லாக்டௌன் காலத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து, நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க, செப்டம்பர் 1 முதல் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் கட்டாயமாக செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2020, 12:44 PM IST
  • அனைத்து அரசு அலுவலகங்களும், டிசம்பர் மாதம் வரை வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்-தமிழக அரசு.
  • முன்னதாக அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயக்கப்பட்டன.
  • ஊழியர்கள் தங்கள் வழக்கமான வேலை நேரத்தில் பணிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
டிசம்பர் வரை அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: தமிழக அரசு!! title=

சென்னை: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் (Government Offices), டிசம்பர் மாதம் வரை வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என்று தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது.

லாக்டௌன் காலத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து, நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க, செப்டம்பர் 1 முதல் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் கட்டாயமாக செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

ALSO READ: செப்டம்பர் 7 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்!! எந்தந்த வழித்தடத்தில் இயங்கும்- முழு பட்டியல்

முன்னதாக அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயக்கப்பட்டன. ஆனால் நாடு தழுவிய நான்காம் கட்ட அன்லாக் செயல்முறையில் 100% ஊழியர்களுடன் செயல்படுமாறு மாநில அரசு, அரசு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே கொரோனா தொற்றால் (Corona Virus) விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக இழக்கப்பட்ட பணி நேரங்களை ஈடு செய்ய, டிசம்பர் வரை, சனிக்கிழமைகளும் வேலை நாட்களாக இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தும் அதன் சேவைகளைத் தொடங்கியுள்ளதால், ஊழியர்கள் தங்கள் வழக்கமான வேலை நேரத்தில் பணிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் லாக்டௌன் தளர்வுகளை மாநில அரசு தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Sep 7 முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில்கள், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி: EPS

Trending News