9 வருடத்திற்கு பிறகு... உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தில் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 27, 2019, 06:06 PM IST
9 வருடத்திற்கு பிறகு... உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு title=

சென்னை: இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான முதல்கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. இன்னும் வாக்களிக்காமல் வரிசையில் நின்ற மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் இருப்பவர்கள் மட்டுமே 5 மணி மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 57.50 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குபதிவு குறித்து இறுதி நிலவரம் வர இன்னும் கால தாமதம் ஆகலாம். ஏனென்றால் இன்னும் சில பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்தக் கட்ட தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இன்று 56 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன் படுத்தப்படுகின்றன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News