தலைவி படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக-வைச் சேர்ந்தவரும் , முன்னாள் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் "தலைவி" படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2021, 04:47 PM IST
தலைவி படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் title=

அதிமுக-வைச் சேர்ந்தவரும் , முன்னாள் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் "தலைவி" படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் (D Jayakumar) அவர், “அவர் படத்தில் வரலாறு முழுவதுமாக பதிவு செய்யப்பட வேண்டும். சில காட்சிகள் திரித்து கூறப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் ஜெயலலிதாவுக்கு திமுக கொடுத்த தொல்லைகள் ஏதும் படத்தில் பதிவு செய்யப்படவில்லை.

படத்தை பார்க்கும்போது எனக்கு மலரும் நினைவுகள் வந்து சென்றது.

அதிமுகவினரும் (AIADMK) மக்களும் கண்டிப்பாக தலைவி படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு தருவார்கள்.

திமுக-வினரின் மிரட்டலுக்கு பயந்து இயக்குநர் சில காட்சிகளை மாற்றியுள்ளது போல எனக்குத் தெரிகிறது.

ALSO READ: தலைவி எப்படி இருக்கிறது; வெளியானது விமர்சனம்!

எம்.ஜி.ஆர். பதவிக்கு என்றைக்குமே ஆசைப்படாதவர். அண்ணாவே அமைச்சர் பதவி கொடுத்தபோது வேண்டாம் என மறுத்தவர். ஆனால் அவர் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கேட்டது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரலாறு திரிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் ஜெயலலிதா (J Jayalalitha) எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தியது போலவும், எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ஜெயலலிதா டெல்லி குறித்த முடிவுகளை எடுத்தது போலவும், நடக்காத காட்சிகளெல்லாம் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை இயக்குநர் உடனடியாக நீக்கிட வேண்டும்.” என்று கூறியுள்ளார். 

ALSO READ: Kollywood: எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்

ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News