வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்!!

Last Updated : Jul 4, 2018, 02:49 PM IST
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..! 
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டம் சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

More Stories

Trending News