தமிழக பட்ஜெட் தாக்கல் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு...!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரி எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்பதை விரிவாக காணலாம்!!

Last Updated : Feb 14, 2020, 12:55 PM IST
தமிழக பட்ஜெட் தாக்கல் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு...!  title=

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரி எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்பதை விரிவாக காணலாம்!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை துணை முதலவர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார். அதில், ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக துணை முதலவர் அறிவித்திருந்தார். 

மேலும், ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கான நிதியில் கல்வித் திட்டங்களுக்காக ரூ.2,018.24 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார். உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு கொறித்தும் அவர் அறிவிப்பை வெளியிட்டார். 

நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளாதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்பதை விரிவாக காணலாம்... 

> போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு

> வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு

> தொல்லியல் துறைக்கு ரூ.31.93 கோடி ஒதுக்கீடு

> பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360.11 கோடி ஒதுக்கீடு

> நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு

> மீன் வளத்துறைக்கு ரூ.1,229.85 கோடி ஒதுக்கீடு

> தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு

> மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

> நீதி நிர்வாக துறைக்கு ரூ. 1,403.17 கோடி ஒதுக்கீடு

> கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு

> தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறைக்கு ரூ.405.68 கோடி ஒதுக்கீடு

> நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு

> கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு

> நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு

> சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.

Trending News