இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை முடிவுற்ற நிலையில், மீனவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
முதல்வரின் பொது நிவாரண நிதியில் மீனவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், காயமடைந்த சாரோணுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த மீனவருக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.