திங்கள் கிழமை முதல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி

சென்னை உட்பட முக்கிய நகரங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 11:04 AM IST
திங்கள் கிழமை முதல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி title=

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் கார்ப்பரேஷன் அல்லது குடிமை அமைப்பு வரம்புக்கு உட்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் (Place of worship), ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் திறக்கப்படலாம் என்று தமிழக அரசு (TN Govt) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் (Chennai) மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம். ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

ALSO READ |  தமிழகத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கப்பதற்கு முதல்வர் அனுமதி

வழிபாட்டுத் தலங்கள்  திறப்பதற்கான முதலில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள், இதற்கும் பொருந்தும். குறிப்பிடத்தக்க வகையில், சென்னையின் புதிய தொற்று பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் முதல் முறையாக 1,000 பேருக்கு கீழே குறைந்துள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில்  வெள்ளிக்கிழமை 119 கோவிட் இறப்புகளைப் (Corona Death) பதிவு செய்துள்ளது, இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். மாநிலத்தில் மொத்தம் இறப்பு எண்ணிக்கை 4,690 ஆக உள்ளது.

ALSO READ |  ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி: EPS

நேற்று 5,800 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஐ எட்டியுள்ளது. நேற்று 67,352 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன மற்றும் ஒட்டுமொத்தமாக 30,88,066 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் (Corona cases in Tamil Nadu) சற்று வீரியம் குறைந்து வருகிறது. அதன்படி ஏழாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. அவ்வபோது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காண விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. 

அந்த வரிசையில் சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) அனுமதி அளித்துள்ளார்.

ALSO READ | ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி: தமிழக முதல்வர்!!

Trending News