பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணனுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

தமிழக சட்டமன்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர் இன்று  காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 05:14 PM IST
பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணனுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி title=

தமிழக சட்டமன்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர் இன்று  காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

சட்டமன்ற வரலாற்றிலேயே காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட் (TN Budget) முதன் முதலாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டினை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வசதியாக சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கை முன் கணினி பொருத்தப்பட்டு இருந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை பிடிஎஃப் வடிவில் படித்துக் கொள்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) பட்ஜெட் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் உரையாற்றினார். அதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடும் முக்கிய அம்சங்களும் இடம் பெற்றிருந்தது.

மின்துறை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தித்திறன் 32,646 மெகாவாட், இருப்பினும் அதிகபட்ச மின்தேவை ஏற்படும் போது 14,351 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.

ALSO READ | TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு

ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து தமிழ்நாடு அரசு வாங்கி சமாளித்துக் கொண்டிருக்கிறது.

"எனவே தமிழ்நாட்டை (Tamil Nadu) மின் மிகை மாநிலம் என்று கூறுவது தவறானது ஆகும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார்.

"இதனை பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என தெரிவித்ததற்கு தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு சந்தேகம் வேறு வேண்டுமா என கிண்டலாக பதிவிட்டு இருந்தார். 

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், "கணக்கு பார்க்கையில் மின்சாரத்தை விட அ.தி.மு.க அடித்த கொள்ளைகள் தான் அதிக ஷாக் அடிப்பதாகவும், இந்த குளறுபடிகள் களையப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின் படி தமிழகம் உண்மையான மின்மிகை மாநிலமாக மாறும் என நாராயணனின் பதிவிற்கு ட்விட்டர் மூலமே பதிலடி தந்துள்ளார்.

ALSO READ | 7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், டி.ஏ உயர்வு இப்போது இல்லை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News