இன்றைய COVID-19 நிலவரம்: 5,584 பேருக்கு பாதிப்பு; 6,516 பேர் குணமடைந்தனர்

அதேநேரத்தில் இன்று 6,516 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 422,691 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2020, 07:17 PM IST
இன்றைய COVID-19 நிலவரம்: 5,584 பேருக்கு பாதிப்பு; 6,516 பேர் குணமடைந்தனர் title=

சென்னை: தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 993 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 78 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,80,524 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்தது.

இன்று கொரோனா நிலவரங்களை தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami) அவர்கள், கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கோவை மாவட்டத்தில் இன்று 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது

Trending News