பாளையங்கோட்டை விளையாட்டு மைதானத்திற்கு பழைய ஹாக்கி டர்ஃப் கொண்டு வரப்பட்டிருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் டிவிட்டரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதாவது அங்கு பழைய ஹாக்கி டர்ஃப் அமைக்கப்படுவதற்கு பதிலாக புதிய டர்ஃப் ஒன்றை கொடுக்குமாறு கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த டர்ஃப் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இருந்து பாளையங்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அது இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற இருப்பதால் அந்த மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஹாக்கி டர்ஃப் வேறு மாவட்டங்களில் அமைக்க திட்டமிட்டதாகவும், பல்வேறு மாவட்டங்களில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, பாளையங்கோட்டையில் அதிக விளையாட்டு வீரர்கள் இருப்பதால் தமிழக அரசு அங்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புதிய டர்ஃப் அமைக்க நான்கு கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், சட்டமன்ற உறுப்பினர் பணத்தில் இருந்து 3 கோடி ரூபாயை நயினார் நாகேந்திரன் ஒதுங்கினால், எஞ்சிய தொகையை கொடுக்க தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று டிவிட்டரிலேயே பதில் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... ரூ.1000 வாங்க டோக்கன் - இந்த தேதி முதல் விநியோகம்!
இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், " மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப்(Hockey turf)அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது".
(@NainarBJP) July 15, 2023
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பதில் பதிவில், " அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம், சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf–ஐ அமைக்கவுள்ளோம்.
மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர். விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம்.
அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்,
@Udhaystalin) July 15, 2023
புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும். அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்." என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பொங்கலுக்கு வேட்டி, சேலை: நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ