அதிமுகவைப் பற்றி பேசுவது தேவையற்றது - டிடிவி தினகரன் விளாசல்

அதிமுகவைப் பற்றி பேசுவது தேவையற்றது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 23, 2022, 05:46 PM IST
  • டிடிவி தினகரன் மயிலாடுதுறை சென்றார்
  • 60ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்
  • அதிமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்
அதிமுகவைப் பற்றி பேசுவது தேவையற்றது - டிடிவி தினகரன் விளாசல் title=

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் பிறகு தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அதிமுக இன்று சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல், நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறது. எனவே, அந்தக் கட்சியைப் பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்.தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேசிக் கொள்ளலாம்.

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்துள்ள நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கின் நிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

Dhinakaran

அப்போது மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன்,மத்தியில் பிரதமர் வேட்பாளரை சொல்ல வேண்டும் என்பதற்கான கூட்டணியில் அமமுகவும் இடம்பெறும். நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். வலுவான கூட்டணியாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

மேலும் படிக்க | தமிழக பாஜக தலைவர் விரைவில் மாற்றம்! அண்ணாமலையின் ஓபன்டாக்

மேலும் படிக்க | ஆளுநரே திமுகவை தட்டிக்கேளுங்கள் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

மேலும் படிக்க | பழையவர்களை இறக்குவேன் புதியவர்களை ஏற்றுவேன் - அண்ணாமலை அதிரடி

மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 அக்டோபரில் முடிக்கப்படும்: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News