தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகளில் மட்டும் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இதையடுத்து அறுவடை செய்த குருவை நெல்களை நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.
ALSO READ | தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டிற்கு மது விற்பனை குறைவு!
கும்பகோணம், திருவிடைமருதூர் பாபநாசம் வட்டாரத்தில் மட்டும் 3 லட்சத்து 48 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கும்பகோணம், சோழன் மாளிகை, சுவாமிமலை, திருப்புறம்பியம், பட்டீஸ்வரம், தாராசுரம், சோழபுரம், திருப்பனந்தாள், ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல்மணிகள் அனைத்தும் திருநாகேஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து ரெயில்கள், லாரிகள் மூலம் சென்னை, தர்மபுரி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
திருநாகேஸ்வரம் நெல் சேமிப்பு கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் திருநாகேஸ்வரத்தில் அருகே சன்னாபுரம் கிராமத்தில் வேளாண் துறைக்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் மீது தரமற்ற தார்ப்பாய்கள் கொண்டு போர்த்தப்பட்டு இருந்ததால் அவை சிறிது நாட்களிலேயே வெயிலில் காய்ந்து கிழிந்து சேதமடைந்தது. இதனால் வெட்டவெளியில் கிடந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த இரண்டு மாதமாக வெயில் மற்றும் மழையில் நனைந்து சாக்கு மூட்டைகள் கிழிந்து நெல்மணிகள் கீழே கொட்டி பாலாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அந்த நெல் மூட்டைகள் மேலும் நனைந்து நெல்மணிகள் முளைப்புத்திறன் அடைந்ததோடு, நெல் முட்டைகள் கருத்துப் போய் பயன்படுத்த முடியாது நிலைக்கு சென்றுள்ளது. இந்த 40 ஆயிரம் நெல் மூட்டைகளில் இருந்து கிட்டத்தட்ட 10000 டன் நெல்கள் வீணாக கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ. 1 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதி கிராமத்தின் உள் பகுதியில் அமைந்திருப்பதால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே தாங்கள் கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் வீணடிப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ALSO READ | Men Only: ஆண்கள் மட்டும் பங்கேற்ற பாரம்பரிய அசைவ பந்தி திருவிழா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR