Video: விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகளை டிராக்டர் மூலம் விரட்டிய விவசாயிகள்

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய விளை நிலங்களில் புகுந்த காட்டுயானைகளை டிராக்டர் மூலம் விவசாயிகள் விரட்டியடித்தனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2022, 09:32 AM IST
Video: விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகளை டிராக்டர் மூலம் விரட்டிய விவசாயிகள் title=

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் இரவு நேரத்தில், வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், இன்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மாதஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாய விளை நிலங்களில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டபடி வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. காட்டு யானைகள் விளைநிலங்களில் சுற்றி திரிவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து டிராக்டர் ஓட்டிச் சென்று, காட்டு யானைகளை சத்தம் போட்டு விரட்டினர். 

வீடியோவை இங்கே காணலாம்:

ALSO READ | Las Luminarias: ஸ்பானிஷ் திருவிழாவில் ‘தீ’ குளிக்கும்  குதிரைகள்..!!

அப்போது டிராக்டரின் விளக்கு வெளிச்சத்தை கண்டு 2 யானைகளும் விவசாய நிலத்தை விட்டு வெளியேறி மண் சாலை வழியாக வனப் பகுதியை நோக்கி சென்றன. விவசாயிகள் மண் சாலையில் காட்டு யானைகள் வனப் பகுதிக்குச் செல்லும் வரை பின்புறமாக டிராக்டரில் விரட்டியபடி வனப்பகுதி அருகே சென்று காட்டு யானைகள் மறையும்வரை விரட்டினர். 

வனப்பகுதியில் இருந்து தினமும் காட்டு யானைகள் வெளியேறி விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க வனப்பகுதியில் அகழி வெட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News