மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு சீட் வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தன்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வள்ளுவர் சிலை திடலில் தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவண குமாரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் மகன் என்ற தகுதியை தவிர அதிமுக வேட்பாளருக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா இருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ் சீட் வாங்கியிருப்பாரா என்றும் ஸ்டாலின் வினவினார். திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆட்சியை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
முன்னதாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக பாஜக கூட்டணி ஒரு சவ ஊர்வலம் என கடுமையாக விமர்சித்தார். தான் பஞ்சம் பிழைப்பதற்கு ஸ்ரீவில்லிபுதூரில் இருந்து வந்தவன் கிடையாது என ஓபிஎஸை சாடினார்.