நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? - அலசல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே திமுக கூட்டணி அதிகமான இடங்களை பெற்று வலுவான கூட்டணியாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. 

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2022, 01:18 PM IST
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? - அலசல் title=

சென்னை: தமிழ்நாட்டில் பல இழுபறிக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. திமுக ஆட்சியமைத்த பின்னர் செப்டம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து சுயேச்சை முதல் அனைத்து 

அதிமுக (AIADMK) ஆளும் கட்சியாக இருத்த போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்த வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் சுணக்கம் காட்டி வந்தார். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்தபின் தேர்தலை சந்திப்பதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த தயக்கமே தேர்தல் தள்ளிப் போவதற்கான காரணம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் மே மாதம் திமுக (DMK) ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உள்ளாட்சித் தேர்தல் (Local Body Election) பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கின. எப்போதுமே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்ற கூற்றின்படியே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மிக முக்கியமானதாக பார்க்கப்படும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் பா.ம.க, தே.மு.தி.க ஆகிய முக்கிய கட்சிகள் தனித்து களம் இறங்குகின்றன. அதே நேரம் நடிகர்களை தலைவர்களாக கொண்ட மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிட இருக்கின்றன. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் (AIADMK - BJP Alliance) இன்னும் இழுபறி நீடித்து வருவது அவர்களுக்கு பாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே திமுக கூட்டணி அதிகமான இடங்களை பெற்று வலுவான கூட்டணியாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கு அவர்களின் கூட்டணி வலுவாக இருப்பதே காரணம்.

ALSO READ | விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள் என பல கட்சிகளை கொண்ட தொகுப்பாக இருக்கிறது திமுக. ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, பா.ம.க ஆகிய கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜ.க-வும் அதிக இடங்களை கேட்டு அடம்பிடிப்பதாகவே செய்திகள் சொல்கின்றன. 

பா.ஜ.க-வும் வெளியேறிவிட்டால் அதிமுக தனியாக தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். ஆனால் மற்றொருபுறம் மக்களிடையே நன்மதிப்பை பெறாத பா.ஜ.க-வால் தான் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர். இது உண்மையானால் அதிமுக தனியாக தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு சாதகமாகும்.

இப்போது இருக்கும் சூழலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிகப்படியான வார்டு மெம்பர்களை பெறப் போவது உறுதி. மற்றொருபுறம் பாமக, விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை குறிப்பிடும்படியான இடங்களை பெற இருக்கின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து அதிமுக-வின் வாக்கு வங்கியை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதிமுக-வின் தற்போதைய முக்கிய பணியாக உள்ளது. 

ALSO READ | அதிமுகவோடு இருந்தால் லாபம், இல்லையென்றால் இழப்பு -கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு!

வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 அன்று தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - பிப்ரவரி 04 
வேட்புமனு பரிசீலனை  - பிப்ரவரி 05 
வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் - பிப்ரவரி 07
தேர்தல் வாக்குப்பதிவு - பிப்ரவரி  19
வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி  22

ALSO READ | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடருமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News