விபரீதமான விளையாட்டு: ஆன்லைன் ரம்மி விளையாடி பெண் தற்கொலை

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வேண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2022, 02:52 PM IST
  • ஆன்லைன் ரம்மி விளையாட்டால் விபரீதம்.
  • விளையாட்டில் ஏற்பட்ட பண இழப்பால் தற்கொலை செய்துகொண்டார் ஒரு பெண்.
  • விளையாட்டு மோகத்தால் வாழ்க்கை பாழான பரிதாபம்.
விபரீதமான விளையாட்டு: ஆன்லைன் ரம்மி விளையாடி பெண் தற்கொலை title=

சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் பணத்தை  இழந்ததால் பட்டதாரி பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகர்  89 வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர்  பவானி. இவர் கணிதத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பாக்கியராஜ்  என்பவரை 8 வருடமாக காதலித்து கடந்த 2016 ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் 3 வயதுடைய மெக்காட்டிக், மற்றொருவர் 1 வயதுடைய  நோயல்  கிறிஸ்.

ஓஎம்ஆர் கந்தன்சாவடியில் உள்ள ஒமேகா ஹெல்த்கேர் சென்டரில் கடந்த ஒரு மாதமாக இரவு பணி செய்து வரும் பவானி, 

கடந்த 1 ஆண்டு காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு அதை மும்முரமாக விளையாடி வந்துள்ளார். பவானியின் கணவரான பாக்கியராஜும் இவரது பெற்றோரும் இவரை கண்டித்து வந்தனர்.  

மேலும் படிக்க | Live Update: 2022 ஜூன் 06 இன்றைய முக்கிய செய்திகள் 

ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் பவானி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு தெரியாமல் தனது 20 சவரன் தங்க நகைகளை பவானி அடகு கடையில் அடகு வைத்து, அந்த பணத்தையும் ஆன்லைன்  ரம்மி விளையாடி, மீண்டும் அந்த பணத்தையும்  இழந்துள்ளார். 

பின்னர் இதைப் பற்றி தனது கணவர் பாக்கியராஜிடம் கூறியுள்ளார். இதனையடுத்து  20 சவரன் தங்க நகைகளை மீட்க, பாக்கியராஜ் தனது மனைவி  பவானியிடம் 1. லட்சத்து 50,000 ஆயிரம் பணத்தை கொடுத்து, நகைகளை மீட்டு வரும் படி கூறியுள்ளார். 

இதனையடுத்து  எண்ணூரில் உள்ள பாரதியிடம் கடந்த 6 மாதம் முன்பு  1 லட்சத்து 50,000 ரூபாயும்  பெரியபாளையத்தில் உள்ள இரண்டாவது தங்கை கவிதா என்பவரிடம் 1 லட்சத்து  50,000 ரூபாயும் பெற்றுக் கொண்டு பவானி தனது வங்கிக் கணக்கில்  செலுத்தி ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி அப்பணத்தையும் இழந்துள்ளார். 

இதனால் மனவருத்ததில் இருந்த பவானி கடந்  4 நாட்கள் முன்பு தனது தங்கை பாரதியிடம் தான் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததை பற்றி கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு கணவர் பாக்கியராஜ் மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்த போது  குளித்து விட்டு பின்னர் படுக்கை அரையில் ஆடை மாற்றி விட்டு   வெகு நேரமாக  வெளியே வராததால் கணவர் பாக்கியராஜ் கதவை திறந்து பார்த்த போது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவி தற்கொலை செய்துகொண்ட துக்காம் தாளாமல் கதறி அழுதுள்ளார்.

பின்னர் இதுகுறித்து மணலி புதுநகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணலி புதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வேண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | மகன் இறந்த துக்கம்; கணவன்-மனைவி ராமேஸ்வரம் கடலில் தற்கொலை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News