தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த செட்டியப்பன் என்பவரது மகன் வினித். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்தார். கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் இயங்காததால் இவருக்கு ஆன்லைனில் பணம் கட்டி சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், வினித் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தனது தாயிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர அவரது தாய் மறுத்ததால் வீட்டிலிருந்து நேற்று மதியம் வெளியேறி உள்ளார்.
மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை
ஏரியூர் அருகே ஆசாரி திட்டு என்ற வனப்பகுதியில் வினித் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அவ்வழியே சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வினித்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கல்லூரி மாணவனின் தற்கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்ட கொலைகளை தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இச்சட்டம் எனத் தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி விளம்பர வழக்கு; மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!