அதிக சத்தத்தை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை!

இரவு அதிக அளவு சத்தத்துடன் திருமண நாளை கொண்டாடியவர்களை தட்டிக் கேட்டதால் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2022, 02:38 PM IST
அதிக சத்தத்தை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை! title=

இரவு அதிக அளவு சத்தத்துடன் திருமண நாளை கொண்டாடியவர்களை தட்டிக் கேட்டதால் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, வில்லியனூர் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சதீஷ் என்கிற மணிகண்டன் வயது (27) ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி நான்கு மாதங்களாகி உள்ளது. இவருடைய சகோதரி புற்றுநோயால் மறைந்து ஏழு மாதங்கள் ஆகிறது. 

இந்நிலையில், இவருக்கு முன்பக்கம் உள்ள வீட்டில் நண்பர்களுடன் சங்கர் - ரமணி தம்பதியினர்  திருமண நாளை நடுரோட்டில் இரவு கொண்டாடியுள்ளார். மேலும் அதிக  சத்தம் போட்டு குடிபோதையில் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டாடியதை கண்டித்தும், தன்னுடைய வீட்டின் முன்பு இவ்வாறு செய்யாதீர்கள் என்றும் சதீஷ் என்கிற மணிகண்டன் தட்டிக்கேட்டு உள்ளார்.

ALSO READ | கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்! 59 வயது முதியவர் கைது!

இதனால் கோபமடைந்த ராஜா, அசார், தமிழ் ஆகிய மூன்று பேர் சதீசை கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி உள்ளனர். இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சதீஷை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிர் இறந்தார்.

ALSO READ | பதறவைத்த இரட்டைக்கொலை, பதிலாய் வந்த என்கவுண்டர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வில்லியனூர் மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், ஆய்வாளர் ராமு, உதவி ஆய்வாளர் ராஜன் உட்பட காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  மேலும் சிகிச்சை பெற்றுவந்த சதீஸ் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காரணத்தினால் கொலை வழக்காக பதிவு செய்து வில்லியனூர் மேற்கு காவல் கண்காணிப்பாளர்  ரங்கநாதன் தலைமையில் போலீசார் சதீஷ், ராஜா, தமிழ், அசார் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News