செவ்வாய் கிரக ஏலியன்கள் நம்மைவிட அறிவாளிகள்: அடித்துக் கூறும் UFO ஆர்வலர்

நாசாவின் கியூரியாசிடி ரோவரில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படத்தை பகுப்பாய்வு செய்யும் போது இந்த எஞ்சினை தான் கண்டுபிடித்ததாக வேரிங் கூறினார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 9, 2020, 12:43 PM IST
செவ்வாய் கிரக ஏலியன்கள் நம்மைவிட அறிவாளிகள்: அடித்துக் கூறும் UFO ஆர்வலர்
Zee Media

யுஎஃப்ஒ (UFO) பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஸ்காட் சி வேரிங் (Scott C Waring) செவ்வாய் கிரகத்தில் ஒரு எஞ்சினின் ஆதாரத்தை கண்டுபிடித்ததாகக் கூறி, இந்த எஞ்சின், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த ஏலியன்களுக்கு சொந்தமானது என்றும் கூறினார். நாசாவின் (NASA) கியூரியாசிடி ரோவரில் (Curiosity Rover) பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படத்தை பகுப்பாய்வு செய்யும் போது இந்த எஞ்சினை தான் கண்டுபிடித்ததாக வேரிங் கூறினார்.

செவ்வாய் கிரகத்தின் (Mars) மேற்பரப்பில் காணப்படும் பொருள் ஒரு நீண்ட, உருளை உலோகப் பொருள் போல தோற்றமளிக்கிறது. வேரிங்கின் படி, இந்த கருவி ஏலியன்களின் (Aliens) முறைகள் மேம்பட்ட நிலையில் இருந்தன என்பதற்கு சான்றாக மட்டுமல்லாமல், வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பம் நம்முடையதை விட மிகவும் மேம்பட்டது என்பதையும் காட்டுகிறது.

ஏலியன்கள் உண்மையில் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகும் இது என்று வேரிங் கருதுகிறார்.

ALSO READ: NASA வெளியிட்டுள்ள செவ்வாய் கிரக படத்தில் காணப்படும் வேற்று கிரக போர்வீரர்…!!!

”கிகாபன் புகைப்படத்தில் இன்று செவ்வாய் கிரகத்தின் ஒரு பழங்கால கலைப்பொருளைக் கண்டேன். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு பொருள் இருப்பதை புகைப்படம் காட்டுகிறது.

இன்றைய நவீன ஜெட் என்ஜின்களை அது ஒத்திருக்கிறது. இந்த பொருள் பழையது, நசுங்கியுள்ளது, அதன் மீது நாள்பட்ட தூசி உள்ளது. ஆனால் அது இப்பகுதியில் உள்ள மற்ற பொருட்களிலிருந்து தெளிவாக மாறுபட்டுள்ளது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள வேற்றுகிரகவாசிகள் நம்முடையதை விட மிகவும் மேம்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தன என்பதற்கான சான்று. இவற்றில் கம்பிகளோ குழாய்களோ பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இவற்றின் கட்டமைப்பில் நேரடியாக மைக்ரோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது "என்று வேரிங் தனது ET டேடாபேஸ் பிளாகில் அவர் எழுதினார். செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கைக்கான ஆதாரம் உள்ளது என்பதற்கான சமீபத்திய ஆதாரமாக UFO ஆர்வலர்கள் ஒரு மார்ஷியன், அதாவது செவ்வாய் கிரக கடவுளின் சிலை ஒன்றைக் காட்டுகின்றனர். இந்த சிலை தாமிரம் அல்லது தங்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதாக வேரிங் கூறுகிறார்.

அவர் தனது வலைப்பதிவான ET டேட்டா பேஸ் பிளாகில் எழுதுகையில், "சில செவ்வாய் கிரக புகைப்படங்களைப் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, ​​ஒரு மலைப்பகுதியின் கீழ் பாகத்தில் மறைந்திருந்த ஒரு விசித்திரமான உருவத்தை நான் கண்டேன். அந்த உருவம் செம்பு அல்லது தங்க உலோகத்தால் ஆனது போல் தெரிகிறது. இதன் வண்ணம் அதன் சுற்றுப்புறத்தின் நிறத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாக உள்ளதால், இதை நிச்சயமாக கூற முடியும். செவ்வாய்கிரகத்தில் வாழ்ந்தவர்கள் தங்களை பாதுகாக்க வணங்கிய கடவுளின் சிலையாக இது இருக்கலாம். சிலைக்கு ஒரு தலை, அடர்த்தியான மார்பு உள்ளது. அதை உள்ளடக்கிய நீண்ட அங்கி தெரிகிறது. ஒரு புத்தகமோ அல்லது கவசமோ அதன் கையில் உள்ளது. பண்டைய அறிவார்ந்த ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அங்கு பிரார்த்தனையும் செய்துள்ளார்கள் என்பதற்கான மிக அற்புதமான ஆதரமாகும் இது” என்று தெரிவித்துள்ளார். 

ALSO READ: திடீர் என வானில் தோன்றிய கருப்பு வளையம்; வேற்று கிரக வாசிகளா?...