Mahindra & Mahindra Offer: உள்நாட்டு ஆட்டோமொபைல் பிராண்டான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, செப்டம்பர் 30 வரை அதன் பல கார்கள் மற்றும் மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் மஹிந்திரா வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் வாகனங்களின் விலை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஹிந்திரா XUV500
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி Mahindra XUV500 -ல் ரூ .179,800 ரொக்க தள்ளுபடி + ரூ .6500 கார்ப்பரேட் தள்ளுபடி + ரூ .50,000 வரை பரிவர்த்தனை போனஸ் + எக்சசரிசில் ரூ. 20,000 வரையிலான சலுகை ஆகியவை கிடைக்கின்றன. இந்த சலுகை W11 Option மற்றும் W11 Option AT ஆகியவற்றுக்கானது. Mahindra XUV500 W11 Option எஸ்.யு.வி-யின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 18.77 லட்சம் ரூபாய் ஆகும். Mahindra XUV500 W11 Option AT-யின் ஹைதராபாத் எக்ஸ் ஷோரூம் விலை ரூ . 19.98 லட்சம் ஆகும்.
மஹிந்திரா XUV300
மஹிந்திராவின் (Mahindra) காம்பாக்ட் எஸ்யூவியான Mahindra XUV300-விலும் தள்ளுபடி உள்ளது. இதில், நீங்கள் ரூ .15,000 ரொக்க தள்ளுபடி + ரூ .4000 கார்பரேட் தள்ளுபடி + ரூ. 20,000 வரையிலான பரிவர்த்தனை போனஸ் + அக்சசரிசில் ரூ .5000 வரையிலான சலுகை ஆகியவற்றை பெறுகிறீர்கள். மஹிந்திரா XUV300-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .7,95,963 தொடங்குகிறது.
ALSO READ: வெறும் ரூ.5,000 செலுத்தி Honda WR-V-ஐ புக் செய்யலாம்: இதோ வழிமுறை
மஹிந்திரா அல்டுராஸ் ஜி 4
மஹிந்திராவின் Mahindra Alturas G4 -ரிலும் பல சலுகைகள் கிடைக்கின்றன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்த எஸ்யூவி-யில் (SUV) ரூ .11,500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் அக்சசரிசில் ரூ .20,000 வரை சலுகை ஆகியவை கிடைக்கும். டெல்லியில் இந்த எஸ்யூவியின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .28,77,260 ஆகும்.
மஹிந்திரா மராஸ்ஸோ
மஹிந்திராவின் மற்றொரு எஸ்யூவி மராஸோவும் (Mahindra Marazzo) பல சலுகைகளக் கொண்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் ரூ .20,000 வரை ரொக்க தள்ளுபடியும், ரூ. 5200 கார்ப்பரேட் தள்ளுபடியும் பெறலாம். மராஸோவின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .12,30,156 இல் தொடங்குகிறது. இந்த சலுகை M2, M2 8Str-க்கு பொருந்தும்.
இந்த வாகனங்களிலும் சலுகைகள் உண்டு
மஹிந்திராவின் ஸ்கார்பியோ, பொலெரோ, KUV100 ஆகியவற்றிலும் நீங்கள் பெரும் சலுகைகளைப் பெறலாம். ஸ்கார்பியோவுக்கு ரூ .4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ .5000 வரையிலான பிற சலுகைகள் கிடைக்கும். பொலெரோவில் ரூ .3000 வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் ரூ .6550 மதிப்புள்ள பிற சலுகைகள் கிடைக்கின்றன.
ALSO READ: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை சரிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR