அமேசான் அதிரடி: ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்

Cheapest Smartphones: குறைந்த பட்ஜெட்டில், ரூ.15,000க்குள் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு, தற்போது நல்ல வாய்ப்பு உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2022, 08:54 PM IST
அமேசான் அதிரடி: ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்  title=

15,000க்கு குறைவான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: குறைந்த பட்ஜெட்டில், ரூ.15,000க்குள் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு, தற்போது நல்ல வாய்ப்பு உள்ளது. சாம்சங், ரியால்மீ, ஒப்போ போன்ற நிறுவனங்கள் 6ஜிபி ரேம், 6,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட தங்கள் ஸ்மார்ட்போன்களில் பெரிய தள்ளுபடியைக் கொண்டு வந்துள்ளன. இ-காமர்ஸ் தளமான அமேசானிலிருந்து இவற்றை மலிவாக வாங்கலாம். இந்த போன்களின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் அவற்றில் கிடைக்கும் தள்ளுபடி ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரியல்மீ நார்சோ 50

ரியல்மீ நார்சோ 50 ஸ்மார்ட்போனின் 6ஜிபி மாறுபாட்டின் அசல் விலை ரூ.14,499 ஆகும். அமேசானில் இருந்து வாங்கினால், எச்டிஎஃப்சி வங்கி கார்ட் மூலம் ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த ரியல்மீ  ஃபோனில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி96 செயலி மற்றும் 50எம்பி பிரதான கேமரா ஆகியவை உள்ளன. மேலும், 5000எம்ஏஎச் பேட்டரி, 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான ஸ்டோரேஜும் கிடைக்கிறது. 

ஒப்போ ஏ54

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் 6ஜிபி மாறுபாட்டின் அசல் விலை ரூ.12,990 ஆகும். இதில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கார்டு மூலம் ரூ.1500 வரை தள்ளுபடி பெறலாம். இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த ஓப்போ போனில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, 5000எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் 13எம்பி பிரதான கேமரா ஆகியவை உள்ளன. மேலும், போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 செயலி, 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை சேமிப்பகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை 

சாம்சங் கேலக்சி எம்12

இந்த சாம்சங் சாதனத்தின் 6ஜிபி மாறுபாட்டின் அசல் விலை ரூ.12,499 ஆகும். இதில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கார்டு மூலம் ரூ.1500 வரை தள்ளுபடி பெறலாம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கொண்டும் இதை வாங்கலாம். இந்த கைபேசியில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 48எம்பி கேமரா மற்றும் 6000எம்ஏஎஹ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, ஃபோனில் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை கிடைக்கும். 

ரெட்மி 9 ஆக்டிவ்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி மாறுபாட்டின் அசல் விலை ரூ.11,499 ஆகும். இதில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கார்டு மூலம் ரூ.1500 வரை தள்ளுபடி பெறலாம். மேலும் இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. 6ஜிபி ரேம் வரை 128ஜிபி சேமிப்பகத்துடன் இந்த போன் 13எம்பி கேமரா, 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆக்டா கோர் ஹீலியோ ஜி35 பிராசஸருடன் வருகிறது.

மேலும் படிக்க | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: ரூ. 23,000 விவோ போன் வெறும் ரூ.2,899க்கு கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News