பேஸ்புக்க்கில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை கண்காணிக்க, 20 உறுப்பினர்களைக்கொண்ட மேற்பார்வை வாரியம் ஒன்றை அந்நிறுவனம் அமைத்துள்ளது.
இதில் உள்ள அனைத்து குழு உறுப்பினர்களும் பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடகநிறுவனங்களில் இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது.
சமூகஊடக நிறுவனமான பேஸ்புக் 20 உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வை வாரியத்தை அமைத்துள்ளதாக புதன்கிழமை அறிவித்தது, இது இன்ஸ்டாகிராம் மற்றும்பேஸ்புக் தளங்களில் உள்ள உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த முடிவுகளில் இவை 'உச்ச நீதிமன்றமாக' செயல்படும்.
இந்த மேற்பார்வைவாரியம் பதிவுகள், அதன்பக்கங்கள், ப்ரொஃபைல் விபரங்கள், குழுக்கள் மற்றும் பேஸ்புக் தளங்களில் கொடுக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும். மேலும், இது பல நெறிமுறைகள் குறித்தும், தலையங்கம், தனியுரிமை, பேச்சு சுதந்திரம் மற்றும் தார்மீக பிரச்சினைகள் குறித்தும் முடிவு செய்யும்.
READ ALSO | FB டார்க் மோடு பயன்பாட்டு முறை தற்போது டெஸ்க்டாப்பிலும் அறிமுகம்...!
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தைஅனுமதிக்க வேண்டுமா அல்லது அகற்ற வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் உள்ள வாரியமாக இது இருக்கும். இது பேஸ்புக் நிறுவனர்மார்க் ஜுக்கர்பெர்க் எடுத்த முடிவுகளையும் ரத்து செய்ய முடியும்.
பேஸ்புக் பயனர்களும், பேஸ்புக் நிறுவனம் இருவரும், வாரியத்திடம் வழக்கை கொண்டு செல்லலாம். ஆனால்எந்த வழக்குகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து போர்டு இறுதிமுடிவெடுக்கும். இந்த வாரியத்துக்கு சொந்தமான வலைதளத்தில் வழக்குகளை சமர்ப்பிக்கலாம்.
பேஸ்புக்செய்தியை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ பதிவில், உள்ளடக்கங்களை நிர்வகிப்பது மற்றும் அமலாக்கத்திற்கானஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஜுக்கர்பெர்க் பதிவு செய்தார். “பேஸ்புக், கருத்து சுதந்திரம் மற்றும்பாதுகாப்பு குறித்து பல முக்கியமான முடிவுகளைஅதிகம் தானே எடுக்கக்கூடாதுஎன்று கூறியிருந்தார் . மேலும் அவர்" அதிஅக் பயனர்கள் இருப்பதால், எங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கின்றது, மேலும் எங்கள் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து நிபுணர்களிடமிருந்து நாங்கள் எப்போதும் ஆலோசனையைப் பெற்றுவருகிறோம் என்கிறார். இப்போது வரை, ஃபேஸ்புக் தளங்களில் உள்ள பதிவுகளை எதை நீக்க வேண்டும், எதை அனுமதிக்க வேண்டும் என்பது பற்றிய இறுதி முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம், எங்கள் எல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டு தளங்களில் அனுமதிக்கப்படுகின்றது, மேலும் அவை அகற்றப்பட வேண்டும்என்ற முடிவுகளை எடுப்பது பெரும்பாலும் எளிதல்ல - பெரும்பாலான முடிவுகள் வெளிப்படையான, அல்லது சர்ச்சைக்குரிய, தாக்கத்தை கொண்டிருக்கவில்லை, என்றாலும் அவற்றில் பல கருத்து சுதந்திரத்திற்கு குறிப்பிடத்தக்கதாக்கத்தை கொண்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
அனைத்துகுழு உறுப்பினர்களும் பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடகநிறுவனங்களில் இல்லாதவர்கள் என்றுகூறப்படுகிறது. அவர்களை பேஸ்புக் நிறுவனத்தால் அகற்ற முடியாது. இவை சமூகஊடக நிறுவனத்தின் நிதியைசார்ந்திருக்க தேவையில்லை.
READ ALSO | இன்ஸ்டாகிராம் பயனர்களும் இனி மெசஞ்சர் அறைகளை பயன்படுத்தலாம்...
ஒருசுயேச்சை நிறுவனத்திற்குசில முடிவுகளை எடுக்கும் பொறுப்பை வழங்கிஅவுட்சோர்சிங் செய்வது தனது நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தஉதவும் என்று அவர் நினைத்ததால், 2018 ஆம் ஆண்டின்தொடக்கத்தில் ஜுக்கர்பெர்க் இந்த வாரியத்தை அமைக்கமுடிவு செய்திருந்தார்.
ஆரம்பத்தில், பேஸ்புக் மூலம் அகற்றப்பட்ட பயனர்உள்ளடக்கம் தொடர்பான நிகழ்வுகளை மட்டுமே வாரியம் பரிசீலிக்கும், ஆனால் பின்னர், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை அனுமதித்தது தொடர்பானநிகழ்வுகளையும் இது ஆய்வு செய்யும்.
மொழியாக்கம் : நேசமணி விக்னேஸ்வரன்