ஜியோவின் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் திட்டம்...! சிறப்பம்சங்கள் இதுதான்

ஜியோவில் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட பிளானை தேடுகிறீர்கள் என்றால் அதன் விலை மற்றும் மற்ற சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2023, 07:00 PM IST
  • ஜியோவின் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டம்
  • 365 நாட்களும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி
  • சிறப்பம்சம் உள்ளிட்ட விவரங்கள் இதோ
ஜியோவின் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் திட்டம்...! சிறப்பம்சங்கள் இதுதான் title=

ஜியோவின் ரீச்சார்ஜ் பிளான்

Jio நிறுவனத்தின் 2999 ஆயிரம் ரூபாய் திட்டம் அந்த நிறுவனத்தின் Prepaid திட்டங்களிலேயே மிகவும் நீண்ட நாள் வேலிடிட்டி உள்ள திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் கூடுதலாக 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டம் பற்றி மேலும் விவரங்களை பார்க்கலாம்.

ரூ.2999 திட்டத்தின் வேலிடிட்டி

இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் 4G ரீசார்ஜ் திட்டங்களிலேயே மிக அதிக வேலிடிட்டி கொண்டதா ரீசார்ஜ் திட்டமாக 2999 ஆயிரம் ரூபாய் திட்டம் உள்ளது. இதேபோல Airtel மற்றும் Vi ஆகிய நிறுவனங்களும் நீண்ட நாள் 4G ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இந்த Jio 2999 ஆயிரம் ரூபாய் திட்டம் 365 நாட்கள் + 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | டேட்டா பயன்படுத்த எது சிறந்தது? ஆபர்களை அள்ளி வழங்கும் Airtel, Vodafone Idea,Jio!

ஜியோ திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்த திட்டம் 356 நாட்கள் + 23 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு மூலம் 7.72 ரூபாய் செலவாகும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS, 2.5GB டேட்டா, மொத்தமாக 912.5 GB டேட்டா வசதி, 75GB கூடுதல் டேட்டா, Jio Cinema, Jio Cloud, Jio Security உள்ளது. இந்த திட்டம் அந்த நிறுவனத்தின் நீண்ட நாள் ரீசார்ஜ் திட்டம் என்பதால் ஒருமுறை நாம் ரீசார்ஜ் செய்தால் 1 வருடம் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்தலாம். இதேபோல 2879 ரூபாய் திட்டம் ஒன்றும் ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி, 2GB ஒரு நாளைக்கு வழங்குகிறது. மேலும் 2545 ஆயிரம் ரூபாய் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி, 1.5GB ஒரு நாளைக்கு வழங்குகிறது.

மேலும் படிக்க | மொபைல் எண் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News