Lamborghini Aventador Ultimae: கண்ணிமைக்கும் நேரத்தில் 200 கிமீ வேகத்தை பிடிக்கும் லம்போகினி

புயல் வேகத்தில் பலரையும் கவர்ந்துள்ளல லக்போகினி அவெண்டடார் அல்டிமேட், நொடியில் 200 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடுமாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2022, 12:24 PM IST
  • லம்போகினியின் புதிய கார் மாடல்
  • 200 கி.மீ வேகத்தை நொடிப்பொழுதில் எட்டும்
  • மார்க்கெட்டில் மிகப்பெரிய டிமாண்ட்
Lamborghini Aventador Ultimae: கண்ணிமைக்கும் நேரத்தில் 200 கிமீ வேகத்தை பிடிக்கும் லம்போகினி  title=

Lamborghini Aventador Ultimae இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி , தங்களுடைய புதிய தயாரிப்பான Aventador-ன் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Lamborghini Aventador Ultimae என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 600 யூனிட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. Lamborghini Aventador LP780-4 Ultimae மாடல் கூபே மற்றும் ரோட்ஸ்டர் பாடி ஸ்டைல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை முறையே 350 மற்றும் 250 அலகுகளாக இருக்கும். 

மேலும் படிக்க | Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்

லம்போர்கினி அவென்டடோர் அல்டிமே செயல்திறனானது ஸ்பெக் அவென்டடோர் SVJ மற்றும் Aventador S ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய காரான Lamborghini Aventador LP780-4 Ultimae, அவென்டடோர் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த V12 எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 8,500 rpm-ல் 770 Bhp மற்றும் 6,750 rpm -ல் 720 Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. இந்த கார் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு மணிக்கு 355 கிமீ வேகத்தில் செல்லும். 

Lamborghini Aventador Ultimae வெறும் 2.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். கூபே பதிப்பில், இது 8.7 வினாடிகளில் 0-200 கிமீ வேகத்தை எட்டும். அவென்டடோர் எல்பி780-4 அல்டிமாவின் வடிவமைப்பு லம்போர்கினியின் வடிவமைப்பைப் போலவே உள்ளது. மேலும், செயல்திறனைப் பொறுத்தவரை, இது Aventador SVJ போலவே தெரிகிறது. அதே நேரத்தில், அதன் ஸ்டைலிங், Aventador S-ஐப் போலவே தெரிகிறது. மேலும் பிரத்தியேகமான அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நிறைய கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய முன்பக்க பம்பர், பக்கவாட்டு மற்றும் பின்புற டிஃப்பியூசர் என எல்லா இடங்களிலும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News