மிகவும் கம்மி விலைக்கு 14-inch Laptop வாங்க செம்ம வாய்ப்பு!

புதிய ரெட்மி ஏர்டோட்ஸ் உடன் இரண்டு புதிய ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 04:33 PM IST
  • Ryzen Edition லேப்டாப்கள் 14 இன்ச் மாடல் மற்றும் 15 இன்ச் என்கிற உள்ளிட்ட இரண்டு வகைகளில் வருகிறது.
  • ரெட்மிபுக் ப்ரோ Ryzen Edition லேப்டாப்க மாடல்களின் விலை 48,900 ரூபாய் முதல் தொடங்குகின்றன.
  • 15 இன்ச் மாறுபாட்டில் 70Whr பேட்டரி உள்ளது, 14 இன்ச் மாறுபாடு 56Whr பேட்டரியைக் கொண்டுள்ளது.
மிகவும் கம்மி விலைக்கு 14-inch Laptop வாங்க செம்ம வாய்ப்பு! title=

சியோமி (Xioami) நிறுவனம் அதன் புதிய ரெட்மி ஏர்டோட்ஸ் உடன் இரண்டு புதிய ரெட்மிபுக் (RedmiBook) ப்ரோ லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் தனது இரண்டு புதிய ஏஎம்டி-பவர்டு ரெட்மிபுக் ப்ரோ Ryzen Edition லேப்டாப்களையும், ரெட்மி ஏர்டோட்ஸ் 3 ப்ரோ டிடபிள்யூஎஸ் பட்ஸ்-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ரெட்மிபுக் (RedmiBook) ப்ரோ Ryzen Edition லேப்டாப்கள் (Laptop) ஆனது 14 இன்ச் மாடல் மற்றும் 15 இன்ச் என்கிற உள்ளிட்ட இரண்டு வகைகளில் வருகிறது. இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் ப்ராசஸர் அடிப்படையில் வேறுபடுகின்றன. ரெட்மிபுக் ப்ரோ Ryzen Edition லேப்டாப்க மாடல்களின் விலை 48,900 ரூபாய் முதல் தொடங்குகின்றன. இதேபோல் 15 இன்ச் மாடல் தோராயமாக ரூ.54,600 முதல் தொடங்கி சுமார் ரூ.60,300 வரை செல்கிறது. 

ALSO READ | 50 ஆயிரம் ரூபாய் Laptop ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க சூப்பர் ஆபர்!

புதிய ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப்களின் 14 இன்ச் மற்றும் 15 இன்ச் ஆகிய இரண்டுமே 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த இரண்டு மாடல்கள் Integrated Radeon graphics-ஐ பெறுகின்றன, அதே நேரத்தில் இணைப்பு விருப்பங்களில் 2 x யூ.எஸ்.பி-சி போர்ட்கள், 1 எக்ஸ்யூஎஸ்பி 2.0 போர்ட், 1 எக்ஸ் யூ.எஸ்.பி 3.2 போர்ட், 3.5 மி.மீ போர்ட் மற்றும் எச்.டி.எம்.ஐ அவுட் ஆகியவைகளை கொண்டுள்ளன. 

15 இன்ச் மாடலில் 15.6 இன்ச் 3,200 x 2,000 டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டி.யூ.வி ரைன்லேண்ட் சான்றிதழ் மற்றும் 16:10 திரை விகிதம் உள்ளது. 14 இன்ச்-இல் 2,560 x 1,600 டிஸ்பிளே, நிலையான 60 ஹெர்ட்ஸ்ரெஃப்ரெஷ் ரேட், 16:10 திரை விகிதம் உள்ளது. 15 இன்ச் மாறுபாட்டில் 70Whr பேட்டரி உள்ளது, 14 இன்ச் மாறுபாடு 56Whr பேட்டரியைக் கொண்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News