வாட்ஸ் அப் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் இன்னும் சில நாட்களில் விளம்பரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், (ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ்)
ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்கள் எந்த விதத்திலும் பாதிக்காது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டால் வருவாயைப் பெருக்கவும், நிறுவனங்கள் மக்களை சென்றடைவதற்கு உதவும் என கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது விளம்பரம் மூலம் சம்பாதிக்க இருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். அதன் ஒரு படியாக வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எப்படி பல இடங்களில் விளம்பரம் இருக்கிறதோ அதேபோல் வாட்ஸ் அப்பில் விளம்பரங்களை பார்க்கலாம்.