கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது.கடும் வெயில் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
மார்ச் மாதத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலில்..!
கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு, தமிழகம், கர்நாடக போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடம் பருவமழை வழக்கமானதாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ., சின்னக்கல்லாறு மற்றும் பாபநாசத்தில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரு, உடுப்பி, கார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.