சென்னை மாமல்லபுரத்தில் இந்திய ராணுவம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடத்தப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளனர்.
ஜம்மு-வில் நடைப்பெற்ற அத்துமீறல் தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மாலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்!
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் பார்வையிட்ட பின்னர் எவ்வித அச்சுறுத்தலையும் இந்தியக் கடற்படை எதிர்கொள்ளும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
கடந்த 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைத்தார். இதில், வர்த்தக துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது.
இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் இதன் மூலம் பெற்றார்.
இந்நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். அப்போது, அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.
உயர்த்தப்பட்ட 4 இணையமைச்சர்களின் இலாகா விவரங்கள்:-
நிர்மலா சீதாராமன் - பாதுகாப்புத்துறை
பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
மத்திய அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் நிர்மலா, நக்வி, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல் ஆகியோர் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டனர். 9 பேர் இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறையும், சுரேஷ் பிரபு வர்த்தகத்துறையும், பியூஸ்கோயல் ரயில்வே துறையும் ஒதுக்கப்பட்டது. மேலும் ஸ்மிருதி இரானியிக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப இலாகா ஒதுக்கப்பட்டது.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து வந்தனர்.
அதிமுக-வின் இரு அணிகளையும் வைத்தும் தமிழகத்தில் வளரும் அளவுக்கு பாஜக இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-
காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை, தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளை வைத்து வளரும் நிலை பாஜகவுக்கு கிடையாது.
கோடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா போராட்டத்தில் கூறியுள்ளார்.
மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அரசின் விசாரணை முடிந்த பின்னர் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.