பீட்டா அமைப்பு சைவத்துக்கு மாறுங்கள் என்று விளம்பரம் செய்து வருகிறது. இந்த விளம்பரத்தில் சினிமா முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த வகையில் பீட்டா அமைப்பின் விளம்பரம் ஒன்றில் நடிகை எமிஜாக்சன் நடித்து உள்ளார்.
இந்த விளம்பரத்தில் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் தன்னுடைய மேனி பளபளப்பு கூடியிருப்பதாக எமி ஜாக்சன் கூறுவது போல் இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
பீட்டா அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளின் மெனுவில் இருந்து அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து உள்ளனர்.
இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்:-
சமீபத்தில் ஜெர்மனி சுற்று சுழல மந்திரி அரசு விழாக்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் அசைவை உணவை பரிமாற தடை விதித்தார். அதுபோல் இந்திய பிரதமர் மோடி தடை விதிக்க வழை வகுக்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது.
மார்ச் 1-ம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை பாஜக எம்.பி. மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் தருண்விஜய் ஆதரித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பத்திரிக்கையாளரிடம் பேசிய தருண் விஜய், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பற்றி புரிந்துக்கொள்ளாமல் பீட்டா அமைப்பு ஜல்லிகட்டுக்கு எதிராக கருத்து கூறிவருகிறது. மேலும் பீட்டா அமைப்பை தடை விதிக்க பார்லிமென்டில் குரல் கொடுப்பேன் என்று தனது ஆதரவை கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய ராதா ராஜன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளர்.
தமிழக முழுவது ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஏழு நாட்களாக மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். மழை, வெயில் என பாராமல் ஆண்கள் பெண்கள் என அனைவரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கூறியது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை டிவிட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.
தமிழக இளைஞர்களின் நாகரீகத்தை பார்த்து டெல்லி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என என்.டி.டி.வி. தொலைக்காட்சி இயக்குனர் சோனியா சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
நம் கலாச்சாரத்திற்கு எதிராக, தேசவிரோத சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக திரிஷா இல்லை என அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார்.
பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டிருந்தது. இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை என்று திரிஷா விளக்கம் அளித்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.