ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2 நீதிபதிகள் அமர்வில் இருந்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்தது உச்சநீதிமன்றம். இந்த அமர்வு கலாசாரத்தில் ஜல்லிக்கட்டு எவ்வளவு முக்கியம், தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு மசோதா குறித்து விசாரிக்கும்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு அறிவிக்க உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று இறுதி முடிவை அறிவிக்க உள்ளது.
இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு நடத்திய அமைதிப் போராட்டத்தின் விளைவாக, அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.
இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கடந்த வார விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதனால், விசாரணையை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடலாமா என்பது பற்றி இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டதால், ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் இதுவரை சிக்கல் இல்லை என்பது குறிபிடத்தக்கது.