Valimai Teaser Update: விரைவில் டீசர், அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் விரைவில் ரிலீஸ் ஆகும் என பிரபல நடிகர் தெரிவித்து உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2021, 02:17 PM IST
Valimai Teaser Update: விரைவில் டீசர், அப்டேட் கொடுத்த பிரபல நடிகர் title=

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இதற்கிடையில் இந்த படம் ரிலீஸ் குறித்து வதந்திக்கள் அவ்வபோது பரவி வருகிறது. இருப்பினும் படக்குழுவினர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’விரைவில் வருகிறது தல தீபாவளி! டீசர் விரைவில்’ என பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகரான ஆர்கே சுரேஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News