நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது என்றும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களைத் தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Madras High Court on AIADMK Flag: அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு உத்தரவு.
10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம் - ஓபிஎஸ்.
தமிழகத்தில் புதுவித நோய்த்தொற்றுப் பரவல் இருப்பதாகவும், அதுகுறித்து தமிழக அரசு சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை கூவமாக மாற்றிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக நிர்வாகிகளைத் தொடர்ந்து பழிவாங்கி வருவதாக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடனான கூட்டத்தில் உரையாற்றிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்ய…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வரத் தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான், அந்தப் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் 94 சதவீதம் போதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளைப் பெற தமிழக அரசியல் வட்டாரத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.