சென்னைக்கு திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் யாருக்கும் அடிபணியமாட்டேன், பொறுத்திருந்து பாருங்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இது அவரது நோக்கத்தை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
சசிகலாவின் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இன்று அதிகாலையிலேயே சென்னை ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்திற்க்கு சென்றார் சசிகலா. அங்கு மறைந்த் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக கட்சியை உருவாக்கியவருமான எம்.ஜி.ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். முதல் சந்திப்பே அதிரடி, சரவெடியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் என பல விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருக்கிறார் சசிகலா.
ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா இன்று சென்னை வரும் நிலையில் நேற்று அவரின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சென்னைக்கு திரும்புகிறார். தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பலரும் கருதுகின்றனர்.
மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் உண்மையின் பக்கம் இருப்பபர்களும் விஸ்வாஸத்தின் பக்கம் இருப்பவர்களும் சசிகலாவை ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா நடராஜன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.