சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்

அஇஅதிமுக தலைவர்கள், சசிகலாவின் விடுதலை தங்கள் கட்சிக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உறுதியாக கூறியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 05:56 PM IST
  • சசிகலாவை வரவேற்ற அஇஅதிமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்.
  • அஇஅதிமுக கட்சியில் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தவர் சசிகலா.
  • தங்கள் கட்சியில் யாரும் சசிகலாவின் கட்சிக்கு போகாமல் இருப்பதில் அஇஅதிமுக அதிக கவனம் செலுத்தும்.
சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்   title=

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டியை வைத்ததற்காக திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டாளரை அஇஅதிமுக, கட்சியை விட்டு வெளியேற்றியுள்ளது. சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஆளும் அஇஅதிமுக-வின் இந்த நடவடிக்கை பல ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

"அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச் செயலாளர் அவர்களே” என்று சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சசிகலாவின் பெரிய படம் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணை செயலாளராக பணியாற்றிய சுப்பிரமணிய ராஜாவின் பெயர் மற்றும் படம் இந்த சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்பிரமணிய ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் வகிக்கும் மற்ற அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வெளியேற்றப்படுகிறார் என்றும் வெளியேற்றப்பட்ட அவருடன் உறவுகளை துண்டிக்குமாறு மற்ற கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் (Jayalalitha) மரணத்தைத் தொடர்ந்து கடுமையான சிக்கல்களை எதிர்கொண்ட அதிமுகவுக்கு சசிகலா விடுதலை ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் நேரத்தில் கட்சியின் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, ​​தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சசிகலாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கட்சியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். பல வகை உள்கட்சி மோதல்கள், சசிகலாவின் தண்டனை, OPS-EPS மீண்டும் ஒன்றிணைந்தது ஆகியவை கட்சி மீண்டு நிலைபெற காரணமாகியது.

புதன்கிழமை, சிறையில் இருந்து சசிகலா (Sasikala) விடுதலை ஆன நாளில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் முன்னிலையில் அஇஅதிமுக திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார்.

ALSO READ: அ.ம.மு.க ஆரம்பிக்கப்பட்டது அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவே – டிடிவி. தினகரன்

சிறைக்குச் செல்வதற்கு முன்பு, ஜெயலலிதாவின் கல்லறைக்கு சென்ற சசிகலா, சபதம் செய்வது போல மூன்று முறை கையை அறைந்து சத்தியம் செய்தது அனைவர் மனதிலும் இன்னும் இருக்கும். அதே மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டியுள்ளனர் என்றும் எண்ணப்படுகிறது.

அஇஅதிமுக (AIADMK) தலைவர்கள், சசிகலாவின் விடுதலை தங்கள் கட்சிக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உறுதியாக கூறினாலும், கடந்த சில ஆண்டுகளில், பல அஇஅதிமுக-வினர் டிடிவி-தினகரன் (சசிகலாவின் மருமகன்) தலைமையிலான அமமுக (AMMK) கட்சிக்கு தாவியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

அஇஅதிமுக கட்சியில் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தவர் சசிகலா. அவரது விடுதலையும் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் அஇஅதிமுக கட்சியால் உன்னிப்பாகக் கவனிக்கப்டும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்கள் கட்சியில் யாரும் சசிகலாவின் கட்சிக்கு போகாமல் இருப்பதிலும் அஇஅதிமுக அதிக கவனம் செலுத்தும்.

ALSO READ: மெரினாவில் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News