இந்தியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். இந்தியா தொடர்ந்து ஆடி வருகிறது.
ஓவர் : 20 ஸ்கோர் : 87/1 ரோஹித் 65(70) ; விராத் 13(16)
20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 46(34) ரன்களில் அவுட் ஆனார்.
ரோஹித் 65(70) மற்றும் விராத் கோலி 13(16) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்று முன்தினம் இடைவிடாது பெய்த மழையால் டாக்கா, சிட்டகாங், பந்தர்பன், ரங்கமாட்டி போன்ற நகரங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக பல இடங் களில் தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடங்கியது. மரங்கள் சாய்ந்தன.
வங்காள தேசம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரங்கமாட்டி சதார், சிட்டகாங், சந்த்னைஷ், பந்தர்பன் என பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் கடைசி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இந்தியா இன்று மோதுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோரா புயல் இன்று வங்காளதேசத்தை தாக்கியது.
இன்று காலையில் வங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே புயல் கரையைக் கடந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்ததையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே அதிகாரிகள் கரையோரப் பகுதிகளில் இருந்த 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். புயல் கரையை கடக்கும் போது 117 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.
ஐதராபாத் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது.
ஆறு விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் வங்கதேச அணி தனது ஆட்டத்தை துவக்கியது.
சிறப்பாக விளையாடி வந்த சாகிப் அல் ஹசன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 14 பவுண்டரிகள் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இறங்கிய சபிர் ரஹ்மானும் விரைவில் வெளியேறினார். பின்னர் விளையாட வந்த மெஹ்தி ஹசன் மிராஸ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இவர் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.
வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.
இந்தியாவில் 16 ஆண்டுக்கு பிறகு வங்காள அணி இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் வருகிற 9-ம் தேதி இந்தியாவுடன் வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.இதற்காக வங்காளதேச கிரிக்கெட் அணி நேற்று ஐதராபாத் வந்தது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வங்காளதேச அணி இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்த மாதம் பிப்ரவரி 5ம்- தேதி மற்றும் 6-ம் தேதி விளையாடுகிறது.
வங்காளதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாராயகன்ச் கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு.
வங்காளதேசத்தில் உள்ள நாராயண்கஞ்ச் மாநகர கவுன்சிலர் நஷ்ருல் இஸ்லாம். வக்கீல் சந்தன்குமார் சர்க்கார். இவர்கள் உள்பட 7 பேர் டாக்கா நாராயண்கஞ்ச் இணைப்பு ரோட்டில் காரில் சென்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டனர். பல நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டு இவர்களது பிணங்கள் ஷதாலக்யா ஆற்றில் வீசப்பட்டன
காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் அறிவித்தன.
சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இதனால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இவர்களை சமாதானப்படுத்தி சார்க் மாநாட்டை நடத்த, மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நேபாளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த போட்டி அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 வெளிநாட்டவர்கள் பலியான சோக சம்பவத்தின் நிகழ்வுகள் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில், தற்போது அங்கு ரமலான் தொழுகை நடைபெற்ற இடம் அருகே குண்டு வெடித்தது.
டாக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஐ.எஸ். வெளியிட்டு உள்ள வீடியோவில், வங்காளதேசத்தில் இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி தொடங்கும் வரையில் இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.