மே மாதத்தில் 50,000 ஆக இருந்த இந்த மீட்பு எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 30 லட்சத்துக்கு மேலுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த என்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த அமைச்சகத்தில் மட்டும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தன.
லாக்டௌனால் பலர் வேலை இழந்துள்ள நிலையில், கிராமப்புறங்களில் 10,000 பேருக்கு வேலை வழங்குவதாக PhonePe அறிவித்துள்ளது. இந்த முயற்சியால், நிறுவனம் சிறிய கடைக்காரர்களையும் மளிகைக் கடைகளையும் டிஜிட்டல் கட்டணத்துடன் இணைக்க விரும்புகிறது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தன் களியாட்டத்தை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் உள்ளது.
கோவிட் 19 வைரஸ் ( covid 19 virus ) தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வைரஸ் மரபணு மாறுகிறது. இருமல், காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் மட்டுமே அறிகுறிகள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இப்போது கொரோனா வைரஸின் கூடுதல் ( Additional Symptoms of Coronavirus) அறிகுறிகள் வருகின்றன.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், COVID-19 ஐக் கண்டறிவதற்கான சோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 40 மில்லியனைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரசுக்கு நேர்மறையாக சோதிக்கப்பட்ட 48 வயதான ஆண் நோயாளியின் கடுமையாக சேதமடைந்த நுரையீரல் வெற்றிகரமாக சென்னை மருத்துவமனையின் மருத்துவர்களால் மாற்றப்பட்டது. ஒரு COVID-19 நேர்மறை நோயாளிக்கு ஆசியாவில் செய்யப்பட்டுள்ள முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையாகும் இது.
கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளிக்கிழமையன்று இறந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார், மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
இந்த வார தொடக்கத்தில் ஹாங்காங் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்த அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்த பின்னரும் மீண்டும் பாதிக்கப்பட்டுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.
மார்ச் மாதத்தில், கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட லாக்டௌனிற்குப் பிறகு, பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்த கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.