கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின், கொடிய வைரஸின் 617 வகைகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று செய்தி வந்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மே 1 முதல் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்று முன்னர் கூறியிருந்தன. ஆனால் கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அளவுகள் தேவைப்படும்.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளன.
மே 1 முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இந்த நிலையில், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், தடுப்பூசி மையங்களிலிருந்து கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சமும் மக்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் மத்தியில் பரவலாக உள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்திய மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாக கருதப்படுகின்றது. தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சந்தைகளில் பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மாநிலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோரிக்சா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 10.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
கோவிட் -19 தடுப்பூசியின் முதல் ஷாட்டை சனிக்கிழமை பெற்ற பிறகு, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, தடுப்பூசி போட்டுக்கொண்டது சிரமமில்லாமலும், வலியில்லாமலும் இருந்தது என்று கூறினார்.
புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பு கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கோவாக்சின், ஆகியவற்றை அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதியளித்துள்ளது
இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் Covid-19 தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..!
இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர் பாரத் பயோடெக்கின் தயாரிப்பான கோவாக்சின் 3 ஆம் கட்ட மருத்துவ முடிவுகளை அறிவித்தது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இடைக்கால மருத்துவ செயல்திறன் 81 சதவீதமாக இருப்பதாக பாரத் பயோடெக் கூறுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) முதல் டோஸ் எய்ம்ஸ் (AIIMS) இல் எடுத்துக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திங்களன்று (மார்ச் 1) ட்வீட் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.