எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் எப்பொழுதும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனை கண்காணிக்க எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஐ.நா. ராணுவ குழுவின் வாகனம் நிறுத்த பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. இதைக்குறித்து பாகிஸ்தான் ஐ.நா.சபையில் இந்தியாவிற்கு எதிராக குற்றச்சாட்டியது.
ஆனால் ஐ.நா. சபை இந்த குற்றச்சாட்டில் உண்மை கிடையாது என கூறி நிராகரித்துவிட்டது.
காஷ்மீரில், கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க, ஒருவரை ஜீப் முன் ராணுவத்தினர் கட்டி வைத்து சென்ற சம்பவம் மிகவும் சரியான செயல் என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள புத்காம் என்ற பகுதியில், ஏப்ரல் 9-ம் தேதி இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு பணிக்காக ராணுவத்தை சேர்ந்த 53-வது ராஷ்டிரிய ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது இளைஞர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஹெர்மெய்ன் எனும் பகுதியில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.
லெப்டினன்ட் பதவியில் இருந்த அந்த அதிகாரி குல்காம் பகுதியைச் சேர்ந்தவர். சோபியானில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு அவர் மர்ம முறையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை, இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்களை கொன்று, அவர்களின் உடலை பாக்., கொடூரமாக சிதைத்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது 2 இந்திய பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீரென தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியானில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் காவலில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோன்று மாநிலத்தில் வங்கிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன, ஆனால் உள்ளூர் கல்வீச்சாளர்கள் இந்நகர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டதற்கு, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதைக்குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பசீத்தை அழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானற்ற செயலுக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாகவும்,
குப்வாரா அருகே பன்ஞ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் தீவிரவாதிகள் காஷ்மீர் பகுதிக்குள் நுழைகின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் குப்வாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியின் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நிலைத்திருக்க செய்ய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்கிறார்கள். அவ்வபோது அவர்களை இந்திய ராணுவம் வீரர்கள் வேட்டையாடுகிறது.
இன்று எல்லையில் கெரான் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள், இந்திய ராணுவம் பலமுறை அவர்களை எச்சரித்தது, பின்னர் ஏற்பட்ட சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து எல்லையில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் மேலும் நடைபெறும் என பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், ராணுவம் குவிக்கப்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் இன்று நக்ரோடா பகுதியில் சீவுதல் நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது. காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்தனர்.
காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.