30+ அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா! வெளியாகும் பகீர் தகவல்கள்!

அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ள விவகாரத்தில் வரும் நாட்களில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2023, 02:51 PM IST
  • கைலாசா 2019ம் ஆண்டு நித்யானந்தாவால் நிறுவப்பட்டது.
  • நித்யானந்தாவின் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா' 30 அமெரிக்க நகரங்களுடன் 'கலாச்சார கூட்டாண்மை' ஒப்பந்தம்.
  • கைலாசா அங்கீகரிக்கப்பட்ட நாடு என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த நித்தியானந்தா முயல்வதாக குற்றசாட்டு.
30+ அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா! வெளியாகும் பகீர் தகவல்கள்!

நியூயார்க்: இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். நித்யானந்தாவின் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா' 30 அமெரிக்க நகரங்களுடன் 'கலாச்சார கூட்டாண்மை' ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம் கற்பனையான நாட்டுடனான 'சகோதரி நகரம்' ( Sister City) ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. நெவார்க் மற்றும் கற்பனை நாடான 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா' இடையே சகோதர-நகர ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று நடந்ததோடு, இதற்கான விழா ஒன்று நெவார்க்கில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கைலாசா 2019ம் ஆண்டு நித்யானந்தாவால் நிறுவப்பட்டது

2019 ஆம் ஆண்டில், நித்யானந்தா 'யுனைடெட் ஸ்டேட் கைலாசா' ஸ்தாபனத்தை அறிவித்தார். அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் கற்பனையான கைலாசா நாட்டுடன் கலாச்சார கூட்டு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இந்த நகரங்களில் ரிச்மண்ட், வர்ஜீனியா, ஓஹியோ, டேடன் மற்றும் பியூனா பார்க் ஆகியவை அடங்கும் என வலைதள செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரம்

மேயர்களோ, நகரசபை உறுப்பினர்கள்மட்டுமின்றி, நாடாளும்மன்ற உறுப்பினர்களும் ஏமாந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைலாசா நாட்டிற்கு 'சிறப்பு காங்கிரஸின் அங்கீகாரம்' வழங்கியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. இந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த நார்மா டோரஸ்.

கைலாசா மீது அமெரிக்க ஊடகங்களின் கண்காணிப்பு

வியாழனன்று வெளியான Fox News அறிக்கை ஒன்றில், நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களின் நீண்ட பட்டியலைக் கொண்ட மிக உயர்ந்த போலி பாபாவை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. கைலாசா தொடர்பான எங்கள் அறிவிப்புகள் எந்த வகையிலும் ஒப்புதல்கள் ஆகாது. அவை ஒரு கோரிக்கைக்கான பதில் மட்டுமே என மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து சில நகர நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது உண்மைதான் என கூறியுள்ள நிலையில், இது மிகப் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க | நித்தியானந்தா விடு தூது... சீன அதிபரிடம் நட்பு கரம் நீட்டும் கைலாசா அதிபர்!

ஒப்பந்தத்தை ரத்து செய்த நெவார்க் 

இந்த மாத தொடக்கத்தில், நெவார்க் நகரத்தின் தகவல் தொடர்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் சூசன் கரோஃபாலோ, கைலாசாவைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றி அறிந்தவுடன், நெவார்க் நகரம் விரைவாகச் செயல்பட்டு, சகோதரி நகர ( Sister City) ஒப்பந்தத்தை ரத்து செய்தது. நித்யானந்தா பல கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இந்தியாவில் தேடப்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ள விவகாரத்தில் வரும் நாட்களில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல போலியான ஒப்பந்தங்களை போட்டு, அப்போது எடுக்கப்பட்ட படங்களை வைத்து, இணையத்தில் கைலாசா அங்கீகரிக்கப்பட்ட நாடு என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த நித்தியானந்தா முயல்வதாக குற்றசாட்டுகளும் எழுந்துள்ளன.

மேலும் படிக்க | 6 மாதங்களுக்கு ஒரு முறை நாட்டை மாற்றும் தீவு! 364 ஆண்டு கால நடைமுறை!

மேலும் படிக்க | Comfort Women: ’ஆறுதல் அளித்த’ பாலியல் அடிமைகளை உருவாக்கிய ஜப்பான்! அதிகார துஷ்பிரயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News