ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்தகூடாது என தடைவிதிக்க கோரிய மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது!
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலைமைச்சர், துணை முதலைமைச்சர் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசியலில் பரப்பரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து கைக்குலுக்கினர். அதிமுக அணிகள் இணைந்தன என அறிவிக்கப்பட்டது.
அதிமுக வழி காட்டுதல் குழுவில் 11 பேர் நியமிக்கப்பட்டனர். ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம்:-
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரகசிய கூட்டணி அமைத்துள்ளார். அனைத்துத் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. நான் எவ்வளவோ முதல்வர்களை பார்த்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி போல யாரையும் பார்த்ததில்லை.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த அவசர ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
முன்னதாக இரு அணியாக இருக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டுமென்றால் தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. இதற்கு எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது.
தற்போது ஜாமீனில் வெளிவந்த தினகரன் இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் இன்று சந்திக்கிறார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் நேற்று வழங்குகினார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் நாளை சந்திக்கிறார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகினார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகினார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகின்றனர்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கபட்டதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினார்கள்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.