தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் அனைத்து வகையான மருந்துகள், வைட்டமின்கள், சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு புறம், கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் இருக்க, மறுபுறன், வழக்கமாக இருக்கும் நோய்களின் அபாயமும் வேகமாக அதிகரித்துள்ளது. மாறிவரும் பருவநிலை காரணமாக, மக்கள் சளி, காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்க முடியும். அத்தகைய சில முக்கிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை விடுத்த எச்சரிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டது என்று நினைப்பது ஒரு "பெரிய தவறாகி விடும்", என்று கவலை தெரிவித்தார்.
கொரோனாவின் நான்காவது அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள், அது எப்போது உச்சத்தை எட்டும்? எப்போது அடங்கும் என்பது குறித்த கணிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்
கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகளாக கருதப்படும் இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே ஓமிக்ரானின் அறிகுறிகள் அல்ல. சமீபத்திய தகவல்களின் படி, வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளிடம் காணப்படுகின்றன. ஓமிக்ரான் மாறுபாட்டால் தாக்கப்பட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆம், உங்களுக்கு வயிற்றில் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீங்கள் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கொரோனா வைரஸ் குடும்பத்தின் வேறு ஒரு கிருமியிலிருந்து விரைவில் ஒரு புதிய தொற்றுநோய் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
Immunity Booster Foods: கோவிட்-19 பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
Omicron Food: ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு பல வித அறிகுறிகள் தென்படுகின்றன. இவற்றில் பசியின்மையும் ஒரு அறிகுறியாகும். மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்த குழப்பத்தில் இருக்கின்றனர். ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால், தொண்டையில் கடுமையான வலி மற்றும் தொண்டையில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. எதை குடித்தாலும், தொண்டையில் வலி இருக்கும். இந்த நிலையில், எந்தெந்த உணவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். தொண்டையில் வலி இருந்தாலும், இந்த உணவுகளால் உங்களுக்கு பிரச்சனை இருக்காது.
Omicron Symptoms: தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் அத்தனை தீவிரமாக இல்லை.
Omicron Variant: தற்போது ஆதிக்கம் செலுத்தும் பிஏ.1 பதிப்பை விட பிஏ.2 துணை மாறுபாடு மிகவும் பொதுவானதாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப முன்னணியின் மரியா வான் கெர்கோவ் கூறினார்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
Omicron Symptoms: மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் டெல்டா மாறுபாட்டுக்கு ஈடாக ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஓமிக்ரானின் அறிகுறிகள் லேசானவையாக உள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் மக்கள் இது குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Omicron New Research: கொரோனா வைரஸின் இந்த பிறழ்வில் வெளிவந்துள்ள சில விஷயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.