ரஷ்ய உளவாளி மீது நடத்திய ரசாயன விஷ தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாக, 60 அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் தங்கள் கருத்துகளை கூறவும், பகிர்ந்துகொள்ளவும் 'NaMo' என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மக்களின் தகவல்களை திருடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 11 அங்குளம் நீளமுள்ள அரியவகை இரட்டைதலை பாம்பு ஒன்று அமெரிக்கவின் அரகனசஸ் பகுதியினில் கன்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பின் புகைப்படமானது இனையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
NDTV ல் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி, "பாம்பு க்வென்டின் பிரவுன் மற்றும் ரோட்னி கெல்லோவால் என்பவர்களால் கைப்பற்றப்பட்டது"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (செவ்வாய்) ஹார்வி சூறாவளியால் பதிக்கப்பட்ட டெக்சாஸினை பார்வையிட செல்கிறார்.
ஹார்வி சூறாவளியால் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது வாழ்வுரிமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமையும் எனவும், இந்த பயணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் எனவும் CNN ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
"தற்போது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறோம், திட்டமிடல் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா நாட்டிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க புடின் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 755 ஆக உள்ள தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 455 ஆக குறைக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருக்கிறது என அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா, இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என கூறியுள்ளது.
ஜப்பான் நாட்டின் கடல் எல்லை அருகில் சோதனை நடத்தப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
அமெரிக்காவில் நண்பர்களுடன் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற இஸ்லாமியப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரெஸ்டோன் நகரில் நப்ரா ஹசனன் (17) என்ற இஸ்லாமியப் பெண் வசித்து வந்தார். ரமலான் மாதம் என்பதால் நேற்று காலை அருகில் உள்ள மசூதிக்கு நண்பர்களுடன் சென்று தொழுகை முடித்து விட்டு ரோட்டில் நடந்து சென்றனர்.
ஹெச்1பி விசா விதிமுறைகள் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி முறையீடு செய்துள்ளார்.
ஹெச்1பி விசா விதிமுறைகளை, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக, ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி, அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்திலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை தோல்வியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய பாதுகாப்புப் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்குக் கடலோரத்தில் உள்ள சின்போ நகரில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஏவுகணை வானில் வெடித்துச் சிதறியதாகவும் அமெரிக்காவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.