கடந்த 5-ம் தேதி வடகொரியா அதன் கிழக்குக் கரையோரம் உள்ள தளத்திலிருந்து நான்கு ஏவுகணை ஏவி சோதனை செய்துள்ளது.
இதன் அருகில் தான் ஜப்பான் கடல் பகுதியில் உள்ளது. இதனால் வட கொரியா ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கண்டித்துள்ளார். பாய்ச்சப்பட்ட நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் விழுந்துள்ளன. வட கொரியா தனது எதிரியாக கருதும் தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்திவருகிறது.
இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா அதன் கிழக்குக் கரையோரம் உள்ள தளத்திலிருந்து நான்கு ஏவுகணை ஏவி சோதனை செய்துள்ளது.
இதன் அருகில் தான் ஜப்பான் கடல் பகுதியில் உள்ளது. இதனால் வட கொரியா ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கண்டித்துள்ளார். பாய்ச்சப்பட்ட நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் விழுந்துள்ளன.
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்திவருகிறது. இது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முடியவில்லை. அதைப்பற்றி ஆராய்ந்து வருகிறோம் என தென்கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த மென்பொறியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
ஐதாராபாத்தைச்சேர்ந்த மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கே வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று கத்தியதாக கூறப்படுகிறது.
டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.
மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின.
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் இன்று உரையாட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:- இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரின் இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து, எப்படியெல்லாம் தகவல்களை திருடி, கசிய விட வேண்டும் என்று புதின் தனிப்பட்ட முறையில் சிலருக்கு அறிவுரைகள் வழங்கியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இது தொடர்பான தகவல்களை ‘என்.பி.சி. நியூஸ்’ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷியா மற்றும் டிரம்ப் மறுப்பு தெரிவித்தனர்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப்
தேர்வு செய்யப்பட்ட பின்னர் சில அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறார். மேலும் அவர் அடுத்த மாதம் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
தற்போது பொருளாதார ஆலோசனை குழுவை உருவாக்கி உள்ளார். இக்குழுவில் பெப்சி நிறுவனத்தை சேர்ந்த இந்திரா நூயி சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மேலும் இந்திரா நூயி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு காரணமான ஒரு பிரபலர் ஷலப் குமார். நேற்று ஜீ பிசினஸ் (Zee Business) செதியாலர்களிடம் பேசிய ஷலப் குமார் இந்தியா-அமெரிக்கா உறவுகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கீழ் ஆழமாகும் என்றார்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடி சப்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். டெர்மினல் 8 என்ற பகுதியில் பலத்த வெடி சப்தம் கேட்டது. இதனை கேட்டதும் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். யாரோ ஒருவன் கைத்துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் சுட்டவர் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விமான நிலையத்தில் பதட்டம் நிலவுகிறது.
பலூஜாவில் விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 250 பயங்கரவாதிகள் பலியானார்கள். 24 மணி நேரத்திற்குள் 250 ஐஎஸ் பயங்கரவாதிகளை குண்டு வீசி கொன்றுவிட்டதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது. `
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது. மேலும் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.
என்.எஸ்.ஜி எனப்படும் அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியா கடந்த மே 12-ம் தேதி விண்ணப்பித்தது. அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அமெரிக்கா, ஈக்வேடார், பெரு, கொலம்பியா, அர்ஜென்டினா, வெனிசிலா, மெக்சிகோ, சிலி ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று அதிகாலை நடந்த முதல் கால் இறுதி போட்டியில் அமெரிக்கா-ஈக்வேடார் அணிகள் மோதின. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்சே கோல் அடித்தார்.
முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்திலும் அமெரிக்காவில் ஆக்ரோஷம் தொடர்ந்தது. 65-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் சார்ட்ஸ் 2-வது கோலை அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.