பொருளாதாரத்தின் அடிப்படையில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையே வர்த்தக போர் மூண்டது. சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் சீனா பொருட்களுக்கு அதிக வரியை விதித்தது அமெரிக்க. இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும், தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை விதித்தது.
சீனாவில் இறக்குமதியாகும் 128 அமெரிக்கா பொருட்களுக்கு 25% வரி விதித்தது. இதனையடுத்து, அமெரிக்காவில் இறக்குமதியாகும் 1,300 சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அந்நாடு திட்டமிட்டது. இதன் காரணமாகவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தக போர் ஏற்பட்டது. மேலும் தங்கள் நாட்டில் இறக்குமதி பொருட்களுக்கு அடுத்தடுத்து வரியை உயர்த்தி வந்ததால் சீனா மற்றும் அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படக்கூடிய நிலைக்கு சென்றது.
இந்நிலையில், இந்த வர்த்தக போர் குறித்து விவாதிக்க, சீன துணை பிரதமர் லியூ ஹி தலைமையில் சீன பிரதிநிதிகள், அமெரிக்கா சென்றனர். பின்னர் வாஷிங்டன் நகரில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன துணை பிரதமர் லியூ ஹி இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் வர்த்தக போரை கைவிட சீனாவும், அமெரிக்காவும் ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டது என சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்தார்.
இதனையடுத்து, சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த வர்த்தக போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.