வாஷிங்டன் டி.சி: அமெரிக்கவின் விண்வெளி அமைப்பான நாசா (NASA) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அணிகள் ஆகஸ்ட் 2 ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) நாசா விண்வெளி வீரர்களான ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோரை பூமிக்கு அழைத்து வர தயாராக உள்ளன.
"புளோரிடா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பேஸ்எக்ஸ் குழு டிராகன் எண்டெவர் விண்கல கப்பல் வந்து இறங்க அனைத்து சூழல்களும் சாதகமாக உள்ளன” என்று நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2020) தெரிவித்துள்ளது.
NEWS: Teams from @NASA and @SpaceX remain GO with plans to bring @Astro_Doug and @AstroBehnken home to Earth on Sunday afternoon. We will continue to monitor weather before undocking Saturday night. Read more: https://t.co/GjXe4q6tQA
— Jim Bridenstine (@JimBridenstine) August 1, 2020
அவர்கள் மேலும் கூறுகையில், "இசயாஸ் சூறாவளியை அணிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. புளோரிடா பன்ஹான்டில் மெக்ஸிகோ வளைகுடாவில் விண்கலம் தரையிறங்கும் தளங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது மதிப்பிடுகின்றது." என்று தெரிவித்தனர்.
SpaceX மற்றும் நாசா ஆகஸ்ட் 1 ஆம் தேதி 7:34 PM EDT (ஆகஸ்ட் 2 அன்று 5:04 AM IST) விண்வெளி கப்பலில் இரு விண்வெளி வீரர்களுடன் க்ரூ டிராகன் விண்வெளி நிலையத்திலிருந்து தன்னியக்கமாக விண்வெளி நிலையத்திலிருந்து வெளிவர திட்டமிட்டிருந்தார்கள்.
This is the first time in human history @NASA_Astronauts have entered the @Space_Station from a commercially-made spacecraft. @AstroBehnken and @Astro_Doug have finally arrived to the orbiting laboratory in @SpaceX's Dragon Endeavour spacecraft. pic.twitter.com/3t9Ogtpik4
— NASA (@NASA) May 31, 2020
சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 2 அன்று 2:42 PM EDT மணிக்கு (ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 12:12 IST) டிராகன் புளோரிடா கடற்கரையில் இறங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.
ISS-ல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இருந்த டக்ளஸ் மற்றும் ராபர்ட் திரும்பி வருவது விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு வணிக ரீதியாக கட்டப்பட்ட மற்றும் இயக்கப்படும் அமெரிக்க விண்கலத்தின் முதல் வருகையைக் குறிக்கும்.
முன்னதாக மே 30 அன்று, SpaceX-ன் பால்கான் 9 புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து க்ரூ டிராகனின் இரண்டாவது டெமோ மிஷனை (டெமோ -2) செயல்படுத்தியது.
ALSO READ: 174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?