Sunita Williams Latest Updates: அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் தங்களின் சர்வதேச விண்வெளி மையத்திற்கான பயணத்தை கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கினர். பலமுறை அவர்கள் பயணம் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. ஒருவழியாக ஜூன் 5ஆம் தேதி அன்று போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில், சர்வதேச விண்வெளி மையத்திற்கான பயணத்தை தொடங்கி, ஜூன் 6ஆம் தேதியே அங்கு சென்றடைந்துவிட்டார்.
இது வெறும் 8-10 நாள்கள் பயண திட்டமாகவே இருந்தது. ஆனால் இது தற்போது 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கண்டறியப்பட்ட ஹீலியம் கசிவு பிரச்னை காரணமாக அவர்களின் விண்வெளி பயணத்தின் காலம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தோடு இணைக்கப்பட்டு புவி வட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என நாசா தெரிவித்திருந்தது.
SpaceX Dragon விண்கலம்
தற்போது இவர்கள் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என உலகமே எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அந்த வகையில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்ப தகுதியில்லை என நிரூபணமானால் SpaceX Crew Dragon விண்கலத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் எலான் மஸ்கின் நிறுவனம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி மையத்தில் மொத்தம் 9 விண்வெளி வீரர்கள் இருக்கின்றனர். மேலும், விண்வெளி மையத்தில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருள்கள் அனைத்தும் போதிய அளவு இருக்கிறது. விரைவில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spacesuit பிரச்னை
தற்போது இரண்டு மாதங்களுக்கு மேல் விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸிற்கு தற்போது புதிய பிரச்னை வந்துள்ளது. அதாவது, விண்வெளி வீரர்களுக்கு Spacesuites எனப்படும் விண்வெளிக்கு ஏதுவான ஆடை மிக முக்கியம். ஸ்டார்லிங்க் விண்கலத்தில் இருந்து டிராகன் விண்கலத்திற்கு மாறும்போது Spacesuits பொருந்தாது என்பதால் இதற்கான தீர்வு குறித்து தீவிரமான ஆலோசனையில் நாசா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. Spacesuits இல்லாமல் ஒருவேளை டிரான்கன் விண்கலத்திற்கு வர வேண்டும் என்பது கூடுதல் ஆபத்து என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,"Spacesuits பொருத்தவரை அவற்றை மாற்றிக்கொள்வது இயலாது. உங்களால் போயிங் Spacesuit ஆடையை ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்திலோ அல்லது ஸ்பேஸ்எக்ஸ் Spacesuit ஆடையை போயிங் விண்கலத்திலோ பயன்படுத்த இயலாது. ஸ்டார்லைனர் செயலிழந்தால் மட்டுமே அவர் டிராகன் விண்கலனுக்கு மாற முடியும். அவர்கள் டிரானில் Spacesuits பொருத்தாமல் திரும்ப வேண்டியிருக்கும்" என்றார்.
எந்த தேதியில் பூமிக்கு திரும்புவார்கள்?
மேலும், சரியாக எந்த தேதியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழு பூமிக்கு திரும்புவார்கள் என்ற கேள்விக்கு நாசாவை சேர்ந்த ஸ்பேஸ் ஆபரேஷன்ஸ் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி கென் போவர்சாக்ஸ் கூறுகையில்,"அனைவரும் தேதியை தெரிந்துகொள்ள விரும்புவார்கள். ஆனால் எங்களுக்கு சில பரிந்துரைக்கப்பட்ட தேதிகள்தான் கிடைத்துள்ளன. அந்த நெகிழ்வுத்தன்மையை நாம் பராமரிக்க வேண்டும் என்று எனக்கும் தெரியும்.
இப்போது, புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி தளத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அங்கு சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் எல்லோரையும் போலவே ஒரு இறுதி முடிவை எடுக்க ஆர்வமாக உள்ளார்கள் என நினைக்கிறேன். எங்களுக்குள் தேதி உறுதிசெய்யப்பட்டதும் பொதுவெளியில் தகவலை பகிர்ந்துகொள்கிறோம். அந்த இறுதி முடிவை எடுக்கும் காலத்திற்கு வந்துவிட்டோம். ஆகஸ்ட் இறுதிக்குள் அறிவித்துவிடுவோம்" என்றார்.
எனவே, சுனிதா வில்லியம்ஸ் எப்போது நாடு திரும்புவார் என்பது கூடிய விரைவில் உறுதியாகிவிடும். இது சுனிதா வில்லியம்ஸிற்கு மூன்று விண்வெளி பயணமாகும். இதுவரை 300 நாள்களுக்கு மேலாக விண்வெளியில் அவர் தங்கியிருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் என்ன செய்கிறார்? அப்டேட் கொடுத்த நாசா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ