விண்வெளி வீரர்களின் ரத்தம்,வியர்வை,கண்ணீர் கலந்த கான்கிரீட்!

செவ்வாய் கிரகத்தில் கட்டுமானத்திற்காக இரத்தம், வியர்வை, விண்வெளி வீரர்களின் கண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி கான்கிரீட் உருவாக்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2021, 07:30 PM IST
விண்வெளி வீரர்களின் ரத்தம்,வியர்வை,கண்ணீர் கலந்த கான்கிரீட்! title=

செவ்வாய் கிரகத்தில் கட்டுமானத்திற்காக இரத்தம், வியர்வை, விண்வெளி வீரர்களின் கண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி கான்கிரீட் உருவாக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகம் தொடர்பாக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில், மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிள், செவ்வாய் கிரகத்திற்கு கட்டுமானப் பொருட்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

mars

இதற்காக விஞ்ஞானிகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செங்கலை அனுப்ப $ 2 மில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.  'மெட்டீரியல்ஸ் டுடே பயோ' இதழில் இந்த மாதம் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செங்கலை கொண்டு செல்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவாகும் நிலையில், செவ்வாய் கிரகத்தின் எதிர்கால கட்டுமான பணியானது மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது.

ஒரு புதிய ஆய்வில், யூரியா (சிறுநீர், வியர்வை, கண்ணீர் கலவை) உடன் இணைந்து, மனித இரத்தம் (மனித சீரம் அல்புமின்) மற்றும் வேற்று கிரக தூசி ஆகியவற்றை கொண்டு கான்கிரீட் போன்ற ஒரு பொருள் உருவாக்கபட்டுள்ளது.  இந்த பொருள் 'ஆஸ்ட்ரோகிரீட்' என்று அழைக்கப்படுகிறது. இது சாதாரண கான்கிரீட்டை விட வலுவானதாக இருக்கும் என கூறுகின்றனர். மேலும், ஆறு விண்வெளி வீரர்களால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இரண்டு வருட பணியின் போது 500 கிலோவுக்கு மேல் அதிக வலிமை கொண்ட ஆஸ்ட்ரோகிரீட்டை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

mars

இந்த திட்டத்தில் பணியாற்றிய மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலெட் ராபர்ட்ஸ், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பல முன்மொழியப்பட்ட கட்டுமான நுட்பங்களை விட இந்த புதிய நுட்பம் கணிசமான நன்மைகளைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News