கொரோனாவை விட கொடிய வைரஸ் இன்னும் உள்ளது என எச்சரிக்கும் சீன பெண்மணி!

சீனாவின் மாயமான 'பேட் உமேன் 'ஷி ஜெங்லி அரசு தொலைக்காட்சியில் தோன்றி, கொரோனா வைரஸை விட இன்னும் அதிக ஆபத்தான வைரஸ்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.

Updated: May 28, 2020, 11:40 PM IST
கொரோனாவை விட கொடிய வைரஸ் இன்னும் உள்ளது என எச்சரிக்கும் சீன பெண்மணி!
Representational Image

சீனாவின் மாயமான 'பேட் உமேன் 'ஷி ஜெங்லி அரசு தொலைக்காட்சியில் தோன்றி, கொரோனா வைரஸை விட இன்னும் அதிக ஆபத்தான வைரஸ்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.

பெய்ஜிங்: வுஹானில் உள்ள ஒரு உயிரியல் ஆய்வகத்திலிருந்து வெளிவந்த கொடிய கொரோனா வைரஸ் பற்றிய மர்மங்களை அறிந்த காணாமல் போன ஒரு முன்னணி சீன வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி, மாநில தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றி,  கொரோனா வைரஸை விட இன்னும் அதிக ஆபத்தான வைரஸ்கள் உள்ளன என்றும் எச்சரித்தார்.

வவ்வால்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வைரஸ்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக,  சீனாவின் "பேட் வுமன்" என்று அழைக்கப்படும் ஜெங்லி, நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய பின்னர் விஞ்ஞானம் அரசியல் ஆக்கப்பட்டது" குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அரசு டிவியில் தோன்றியபோது, "நாங்கள் கண்டுபிடித்த வைரஸ்கள் உண்மையில் மிஅக் கொடிய ஆபத்தான வைரஸின் ஒரு சிறிய பாதிப்பு மட்டுமே" என்று கூறினார். COVID-19 வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து தோன்றியது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுகளையும் ஷி ஜெங்லி நேரடியாகக் குறிப்பிட்டார். வுஹான் ஆய்வகத்தில் அவர் வவ்வால்கள் பற்றிய முன்னணி ஆராய்ச்சியாளராக இருந்தார்.

அவர் மர்மமான முறையில் காணாமல் போனது பற்றியும் அவருக்கும் தொற்று பாதிப்பு உள்ளதா இல்லையா  என்பது பற்றியும் ட்வீட்டில் அவர் எதுவும் கூறவில்லை.  இருப்பினும், தனது ஆராய்ச்சி குழு கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கொரோனா வைரஸின் மாதிரிகளைப் பெற்றதாகவும், மாதிரிகளை செயல்திறன் அடிப்படையில்  பிரித்ததாகவும், நோய்க்கிருமிகளை தனிமைப்படுத்தியதையும் ஜெங்லி கூறினார்.

"பின்னர் மிகக் குறுகிய காலத்தில், இந்த மாதிரிகளில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்உள்ளதுஎன்பதை அவர்கள் கண்டறிந்ததாகவும், அதன் முழு மரபணு வரிசையையும் பெற்றதாகவும்,  நோய்க்கிருமிகளின் மரபணு தன்மை ஏற்கனவே இருக்கும் வைரஸ்களைப் போலவே இல்லை என்பதையும் கூறினார்.... எனவே, அவர்கள் அதற்கு ஒரு நாவல் கொரோனா வைரஸ், "என்று பெயரிட்டதாக அவர் அரசின் CGTN -ல் கூறினார்.

கொரோனா வைரஸின் மாதிரிகளை ஜனவரி 12 அன்று உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) சமர்ப்பித்ததாகவும் ஜெங்லி கூறினார். நோய்க்கிருமிகளை அடையாளம் காண அவரது குழு,  விலங்கு நோய்த்தொற்று பரிசோதனைகளை மேற்கொண்டதாக சீன ஆராய்ச்சியாளர் மேலும் தெரிவித்தார்.

"பிப்ரவரி 6 ஆம் தேதி டிரான்ஸ்ஜெனிக் எலிகளிடம் ஒரு விலங்கு தொற்று பரிசோதனையை முடித்ததாகவும், பின்னர் பிப்ரவரி 9 ஆம் தேதி ரீசஸ் குரங்குகளுடன் விலங்கு நோய்த்தொற்று பரிசோதனையை நடத்தியதாகவும் அவர் கூறினார். விலங்கு நோய்த்தொற்று சோதனைகள் இரண்டும்,  தாங்கள் பிரித்து தனியாக வைத்துள்ள கொரோனா வைரஸ், விவரிக்கப்படாத நிமோனியா வர காரணமாக இருந்தது என்றும் அவர் CGTN-ல் தெரிவித்தார்

வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், அறிவியல் அரசியலாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இது மிகவும் வருந்தத்தக்கது என்றும், உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள்இதை விரும்பமாட்டார்கள் என்றார்.  முன்பு குறிப்பிட்டது போல, தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்  என்றார்.

இருப்பினும்,  இயற்கையில் பல வகையான வவ்வால்கள் மற்றும் பிற வன விலங்குகள் இருப்பதால் , அவை பல வகை வைரஸை பரப்புபவையாக இருக்கலாம் என்பதால், அவரும் அவரது குழுவும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடரும் என்று ஷி ஜெங்லி நேர்காணலில் கூறினார்.

"நாங்கள் கண்டுபிடித்த கொரோனா வைரஸை விட இன்னும் அதிக ஆபத்தான வைரஸ்கள் உள்ளனஎன்றும் எச்சரித்தார். புதிய தொற்று நோய்களிலிருந்து  மனிதர்களைப்பாதுகாக்க விரும்பினால், காட்டு விலங்குகளால் பரப்பப்படும் பல  வைரஸ்களைப் பற்றி அறிந்துகொண்டு ஆரம்ப எச்சரிக்கைகளை கொடுக்க நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும், "என்றார்.

தனது சுருக்கமான நேர்காணலின் போது, சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கையாண்டதுடன், வைரஸ்கள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியத்தையும்  ஷி வலியுறுத்தினார்.

-   தமிழாக்கம் நடராஜன் விஜய குமார்