'உங்களுக்கு வேற வேலையே இல்லையா’.. ஜெப் பெசோஸை கலாய்க்கும் எலான் மஸ்க்..!!

பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸை அதன் $ 2.9 பில்லியன் மதிப்பிலான நிலவுக்கான லேண்டர் திட்டத்திற்காக தேர்வு செய்ததற்காக நாசா மீது வழக்கு தொடர்ந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 2, 2021, 07:19 PM IST
  • ஜெப் பெசோஸ்-எலோன் மஸ்க் இடையே நீண்டகாலமாக தீவிர போட்டி நிலவுகிறது
  • பெஸ்கோஸை, எலான் மஸ்க் வெளிப்படையாக விமர்சிக்கிறார்.
  • பெசோஸுக்கு சொந்தமான விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நாசா மீது வழக்கு தொடர்ந்தது.
'உங்களுக்கு வேற வேலையே இல்லையா’.. ஜெப் பெசோஸை கலாய்க்கும் எலான் மஸ்க்..!! title=

புதுடெல்லி: ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)  இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. டெஸ்லா (Tesla) நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk ), தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதையே முழு நேர  தொழிலாக கொண்டிருப்பதாக அமேசான் நிறுவனர்  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை கிண்டல் செய்துள்ளார். அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகிய பிறகு அது தான் பெசோஸின் "முழுநேர வேலை" என்று மஸ்க் கூறினார்.

சிஎன்பிசி செய்தி நிறுவனத்தின் விண்வெளி நிருபரின் ட்வீட்டுக்கு பதிலளித்த மஸ்க் (Elon Musk), "ஸ்பேஸ்எக்ஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தாக்கல் செய்வது தான் அவரது  முழுநேர வேலை" என்று கிண்டலுடன் பதிவு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், உலக பணக்காரரான பெசோஸை ட்விட்டரில் வெளிப்படையாக விமர்சித்தார். அவர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்ய மட்டுமே ஓய்வு பெற்றார் என்று எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். எலான் மஸ்க் தனது ட்வீட் செய்தியில் "ஸ்பேஸ்எக்ஸுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் ஒரு முழுநேர வேலைக்காக பெசோஸ் ஓய்வு பெற்றார் ..." என பதிவு செய்துள்ளார்.

ALSO READ | 'இந்தியாவில் டெஸ்லா கார்களை விரைவில் கொண்டு வர ஆசைதான்; ஆனால்' : Elon Musk

கடந்த மாதம், பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸை அதன் $ 2.9 பில்லியன் மதிப்பிலான நிலவுக்கான லேண்டர் திட்டத்திற்காக தேர்வு செய்ததற்காக நாசா மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்த பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA ஸ்பேஸ்எக்ஸின் ஒப்பந்தத்தை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்தது.

அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனை (US Federal Communications Commission - FCC) தனது லட்சிய விண்வெளி இணைய சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) என்னு சேவைக்காக, மேலும் சில  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ஸ்பேஸ்எக்ஸின் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

ஸ்டார்லிங்க் தற்போது சுமார் 1,740  பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களால் இயக்கப்படுகிறது, இது உலகளவில் 90,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. இன்டர்நெட் நெட்வொர்க்கை அதிகரிக்க நிறுவனம் 30,000 இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | NASA - SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News