நியூடெல்லி: உலகளவில் 634,000 ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (SUV) திரும்பப் பெறுவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் கார்களை பரிசோதிக்க வேண்டும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த SUV களில் உள்ள என்ஜின்கள் இயங்கும் போது, கிராக் செய்யப்பட்ட ஃப்யூவல் இன்ஜெக்டர் எரிபொருளை அல்லது எரிபொருள் நீராவியை சூடான மேற்பரப்புகளுக்கு அருகில் குவித்து, வாகனத்தின் அடிப்புறத்தில் தீ ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரீகால் 2020-2023 மாடல் ஆண்டு ப்ரோன்கோ ஸ்போர்ட் மற்றும் 3 சிலிண்டர், 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட எஸ்கேப் எஸ்யூவிகளை உருவாக்கியது. அந்த கார்களில் பல, ஏப்ரல் மாதத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டன. ஏனெனில் அந்த வாகனங்களின் எண்ணெய் பிரிப்பான் பகுதிகளில் விரிசல் மற்றும் கசிவு ஏற்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பல கார்களில் இந்த இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல விமர்சனங்களும் எழுந்தன.
இதற்கு முன்னதாக, இதேபோல் திரும்பப்பெற்று பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களுக்கு இன்னும் புதிய திருத்தம் தேவைப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சமூக ஊடகங்களில் பரவும் தேர்வு முடிவுகள் போலி! எச்சரிக்கும் TNPSC
அமெரிக்காவில் சுமார் 520,000 வாகனங்களும் மற்ற நாடுகளில் சுமார் 114,000 வாகனங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பழுதுபார்ப்பு பணி முடிந்தவுடன், மீண்டும் வாகனங்களை பெற்ற கார் உரிமையாளர்கள், எரிபொருள் உட்செலுத்தியில் விரிசல் உள்ளதா என்பதைக் கண்டறிய டீலர்கள் வாகன மென்பொருளைப் புதுப்பிப்பார்கள். ஓட்டுனர்களுக்கு டாஷ்போர்டு செய்தி மூலம் எச்சரிக்கையும் வழங்கப்படும்.
"எரிபொருள் பிரிப்பானில் அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டால், எந்தவொரு ஆபத்தையும் குறைக்க இயந்திர சக்தி தானாகவே குறைக்கப்படும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும், வாகனத்தை நிறுத்தி சேவைக்கு ஏற்பாடு செய்யவும் அனுமதிக்கிறது" என்று ஃபோர்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | திமுக அரசுக்கு இன்னும் 44 அமாவாசைகளே உள்ளது: எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு
சிலிண்டர் ஹெட் மற்றும் சூடான பரப்புகளில் இருந்து எரிபொருளை வெளியேற்றும் ஒரு குழாயை நிறுவும் டீலர்கள், என்ஜின் மேல் பகுதியில் எரிபொருள் வாசம் எந்த அளவு வருகிறது என்பதை சரிபார்ப்பார்கள்.
வாகனத்தின் அடிப்பகுதியில் தீ பற்றியது தொடர்பாக மொத்தம் 54 அறிக்கைகள் கிடைத்துள்ளதாக ஃபோர்டு தெரிவித்தது, இதில் நான்கு வாகனங்களில், ஃப்யூல் இன்ஜெக்டர்கள் கிராக் ஆகியிருந்தன. 13 கார்களில், எரிபொருள் உட்செலுத்தி கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும், இவற்றில் இறப்புகள் எதுவும் இல்லை என்றும் கார் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகனத்தை திரும்பப்பெறும் முடிவை, வாகனங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு உரிமையாளர்கள் நினைத்துவிடக் கூடாது என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது. எரிபொருள் டாங்கியில் வெளிப்புற கசிவு மற்றும் உட்செலுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மும்முரமாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | போலி பணி நியமன ஆணை : எஸ்.பி. வேலுமணிக்கு அடுத்த இடி... தமிழ்நாடு முழுவதும் முறைகேடா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ